முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஸ்வரூபம் படம்: இஸ்லாமியர்களுக்கு ரஜினி வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.26 - கமல்ஹாசன் நடித்து இயக்கியிருக்கும் படம் விஸ்வரூபம். இந்த படம் நேற்று திரைக்கு வருவதாக இருந்தது. திடீரென விஸ்வரூபம் படத்தை திரையிடக்கூடாது இஸ்லாமியர்களுக்கு எதிராக படம் உருவாகி உள்ளது என இஸ்லாமிய அமைப்பினர் போர்கொடி தூக்கினார்கள். அதனால் சமூக அமைதியை கருத்தில் கொண்டு தமிழக அரசு விஸ்வரூபம் படம் திரைக்கு வருவதை காலம் தாழ்த்தி திரையிட அவகாசம் கொடுத்து தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து கமல்ஹாசன் தரப்பினர் நேற்று முன்தினம் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி விஸ்வரூபம் படத்தை பார்த்து பின்பு 28-ம் தேதி, விசாரணையின் போது ரிலீஸ் செய்வது தொடர்பாக அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர். அதன்படி நீதிபதிகள் இன்று விஸ்வரூபம் படத்தை பார்வையிட உள்ளனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் ரஜினிகாந்த் விஸ்வரூபம் படம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். 

அதன் விவரம் வருமாறு:-

கமல் ஒரு சாதாரண கலைஞன் அல்ல. தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு செல்வதற்கு ஒரு காரணமாக உள்ள மகா கலைஞன். இதையெல்லாம் மனதில் கொண்டு இந்த படத்தை முழுசா தடை செய்யனும் என்ற கருத்திலிருந்து மாறி, கமல் வந்த பிறகு கலந்து பேசி, கதைக்கு பாதிப்பு வராத வகையில் சரிசெய்து படத்தை வெளியிட உறுதுணையாக இருக்குமாறு மிலாது நபி வாழ்த்துக்களுடன் இஸ்லாமிய சகோதரர்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!