முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஸ்வரூபம் படத்துக்கு தடை: இலங்கையில் ஆர்ப்பாட்டம்

வியாழக்கிழமை, 24 ஜனவரி 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, ஜன. 25 - இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையில் விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது போல இலங்கையிலும் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக இலங்கை தெளஹீத் ஜமாஅத் துணை செயலாளர் ரஸ்மின் மெளலவி கூறுகையில், 

தமிழகத்தில் விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தணிக்கைக் குழுவினால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் தடை என்பது சாத்தியமாகுமா என்பது குறித்து நீதிமன்றமே முடிவு செய்யவேண்டும். மேலும் படத்தினை மீண்டும் தணிக்கை குழுவிற்கும் அனுப்பும் நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உண்மையில் படத்தின் அதிக காட்சிகள் இஸ்லாமியரை கொச்சைப்படுத்துவதாவே உள்ளது. 

இந்தக் காட்சிகளை நீக்கினால் படமே இல்லை என்று படத்தை பார்த்த எமது அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இலங்கையிலும் விஸ்வரூபம் திரைப்படத்தினை தடை விதிக்க நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். இதன் முதல் கட்டமாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!