முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஸ்வரூபம் படம்: நீதிபதி கே.வெங்கட்ராமன் பார்த்தார்

சனிக்கிழமை, 26 ஜனவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜன. 27 -​விஸ்வரூபம் படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இதனால் தமிழக அரசு படத்துக்கு தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து கமல் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை கடந்த 24ந் தேதி  விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  கே.வெங்கட்ராமன்  வழக்கு விசாரணையின் போது குடியரசுத்தினத்தன்று (26ம் தேதி) தானும் மற்றவர்களும் விஸ்வரூபம் படத்தை திரையிட்டு பார்ப்போம் என்றும் அதில் ஆட்சேபகரமான பகுதிகள் ஏதாவது இருக்கிறதா என்பதை பார்ப்போம் என்றும் கூறியிருந்தார். அதோடு தமிழக அரசு விதித்த தடை நீடிக்கும் என்றும் கூறியிருந்தார். படத்தை பார்த்த பின்பு வரும் 28ந்தேதி நடைபெறும் விசாரணையின் போது படம் குறித்து தீர்ப்பு கூறப்படும் என்றும் அப்போது கூறியிருந்தார்.

இதையடுத்து நீதிபதி கே.வெங்கட்ராமன் நேற்று பிற்பகல் விஸ்வரூபம் படத்தை  பார்த்தார். சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் இந்த படம் திரையிடப்பட்டது. நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு படம் திரையிடப்பட்டது.அப்போது நீதிபதி கே.வெங்கட்ராமனுடன் ரிஜிஸ்ட்ரார் ஜெனரல் சொக்கலிங்கம் மற்றும் 5 ரிஜீஸ்ட்ரார்கள், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதிகிருஷ்ணன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், அரசு ப்லீடர் ஜி.வெங்கடேஷ் மற்றும் 6 அரசு வழக்கறிஞர்களும், படத்தை தயாரித்த கமலின்  ராஜ்கமல் இன்டர்நேஷனல் சார்பில் பி.எஸ்.ராமன், மூத்த வழக்கறிஞர் சதீஷ் பாராசரன் ஆகியோரும் , முஸ்லீம் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் சங்கர சுப்பு , வழக்கறிஞர் ராஜசேகர் ஆகியோரும் படத்தை பார்த்தனர். படம்  மாலை 4.35 வரை ஓடியது. இதன் பின் அனைவரும் கலைந்து சென்றனர், வரும் 28​ந்தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது.அப்போது இவ்வழக்கின் தீர்ப்பை நீதிபதி வெங்கட்ராமன் அளிப்பார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்