முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஸ்வரூபம் பட பிரச்சினை: கமலை விட்டு நழுவிய விருது

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜனவரி 2013      சினிமா
Image Unavailable

புது டெல்லி, ஜன. - 28 - விஸ்வரூபம் திரைப்பட பிரச்சினையை தொடர்ந்து நடிகர் கமலஹாசனுக்கு பத்மபூஷண் விருது கிடைக்காமல் போனதாக தெரிகிறது. பத்மபூஷண் விருது பெறுவோரின் தகுதி பட்டியலில் கமலஹாசன் பெயர் இருந்ததாகவும், கடைசி தருணத்தில் அவரது பெயரை மத்திய அரசு நீக்கியதாகவும் கூறப்படுகிறது. சிறுபான்மையினரின் உணர்வுகளுக்கு எதிராக உள்ளதாக கூறி விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட முந்தைய நாள் வவை கமல் பெயர் விருது பெறுவோர் தகுதி பட்டியலில் இருந்தது. அவரது விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. இதனால் பத்ம விருதுக்கு கமலின் பெயரை அறிவிப்பதில் மத்திய அரசுக்கு குழப்பம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே விருது பெறுவோர்பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. எனினும் இறுதி நேரத்தில் அவரது பெயர் நீக்கப்பட்டது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர். இம்முறை பத்மவிபூஷண் விருதுக்காக அறிவிக்கப்பட்ட 24 பேரில் 8 பேர் கலைத்துறையை சேர்ந்தவர்கள். பலமுறை தேசிய விருது பெற்ற கமலஹாசனுக்கு ஏற்கனவே பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டுள்ளது. பத்மபூஷண் விருதுக்காக கமலஹாசன் பெயரை தமிழக அரசு பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!