ரஞ்சிகோப்பை இறுதிப்போட்டி முதல் இன்னிங்ஸ்: 144 ரன்களில் சவுராஷ்டிராவை சுருட்டிய மும்பை

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை. ஜன. - 28 -  ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா அணியை முதல் இன்னிங்ஸில் 144 ரன்களுக்குள் சுருட்டியது மும்பை. ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. 40-வது முறையாக கோப்பையை வெல்லும் இலக்கோடு மும்பை அணியும் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு வந்த சவுராஷ்டிரா அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்து சவுராஷ்டிரா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. மும்பை அணியின் மிரட்டலான பந்து வீச்சில் சவுராஷ்டிரா நிலை குலைந்தே போனது. 5 விக்கெட்டுகளை இழந்து வெறும் 50 ரன்களை எடுத்த ஒரு பரிதாப நிலையில் தவித்தது சவுராஷ்டிரா. மும்பை அணியின் குல்கர்னி வீசிய வேகப்பந்து வீச்சுகள் சவுராஷ்டிரா வீரர்களை திணற வைத்தன. இந்த தடுமாற்றமான ஆடத்தால் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 148 ரன்களில் சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்கைத் தொடங்கிய மும்பை அணி ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்: