ஆஸ்திரேலிய ஓபன்: நோவக் ஜோகோவிக் சாம்பியன்

திங்கட்கிழமை, 28 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

மெல்போர்ன், ஜன. 30 - ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறு திச் சுற்றில் செர்பிய வீரர் நோவக் ஜோ கோவிக் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். பரபரப்பாக நடைபெற்ற இறுதிச் சுற்றி ல் அவர் இங்கிலாந்து முன்னணி வீரரா  ன ஆன்டி முர்ரேயை வீழ்த்தி புதிய வர லாறு படைத்தார். 

இந்த வருடத்தின் முதலாவது கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் முக்கிய நகரமான மெல்போர்னில் வெகு விமர்சையாக நடந்தது. 

இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப் ப ற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்க னைகள் களத்தில் குதித்தனர். கடந்த 2 வார காலமாக நடைபெற்ற இந்தப் போட்டி தற்போது நிறைவு பெற்றது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படு த்தினர். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்று ஆட்டம் நேற்று முன் தினம் இரவு நடந்தது. இதில் உலக நம் பர் - 1 வீரரான ஜோகோவிக்கும், இங் கிலாந்து வீரரும் பட்டத்தைக் கைப்பற்ற பலப்பரிட்சை நடத்தினர். 

இந்தப் போட்டியில் செர்பிய வீரரான ஜோகோவிக் அபாரமாக ஆடி 6 - 7(7), 7 -6(7), 6 - 3, 6 -2 என்ற செட் கணக்கில் இங்கி. வீரர் முர்ரேயை தோற்கடித்து சாம்பியன் ஆனார். 

இதன் மூலம் உலகின் முதல் நிலை வீர ரான ஜோகோவிக் ஆஸ்திரேலிய ஓப ன் பட்டத்தை தொடர்ந்து 3 முறை வெ ன்று ஹாட்ரிக் சாதனை படைத்து இரு க்கிறார். 2011- ம் ஆண்டும்,கடந்த ஆண்டும் அவர் ஆஸி. பட்டத்தை வென்று இருந்தார். 

டென்னிஸ் ஓபன் அத்தியாயம் 1968 - ம் ஆண்டு தொடங்கிய பிறகு, ஹாட்ரிக் சாதனை படைத்த முதல் வீரர் என்ற வர லாற்றை ஜோகோவிக் படைத்தார். 

1931- 33 ஆண்டு வரை ஜேக்கிராபோர் டும், ராய் எமர்சன் 1963 - 67 வரையும், தொடர்ந்து ஆஸ்திரேலிய ஓபன் பட்ட த்தை வென்று இருந்தனர். 

ஜோகோவிக் ஒட்டு மொத்தமாக ஆஸ் திரேலிய ஓபன் பட்டத்தை 4 முறை வென்று உள்ளார். 2008 -ம் ஆண்டிலும் அவர் பட்டம் வென்று இருந்தார். 

இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை அதிக முறை வென்ற வீரர்களில் 2-வது இடத்தில் இருக்கும் அகாசி (அமெரிக்கா), ரோஜர் பெடரருடன் (சுவிட்சர்லாந்து) இணைந்து கொண்டார். 

அமெரிக்க வீரர் அகாசி 1995, 2000, 2001, 2003 ஆகிய ஆண்டுகளிலும், பெடரர் 2004, 2006, 2007, 2010 ஆகிய ஆண்டுகளி லும் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று இருந்தனர். 

தவிர, ஜோகோவிக் கைப்பற்றிய 6-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும். விம்பிள்டன், அமெரிக்க ஓபன் பட்டத் தை (2011), தலா ஒரு முறையும் வென் று உள்ளார். பிரெஞ்சு ஓபன் பட்டத்தை இதுவரை பெறவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்: