முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே. வங். அமைச்சர்கள் சொத்துக்கள் பல மடங்கு அதிகரிப்பு

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா,ஏப்.20 - கடந்த 5 ஆண்டுகளில் மேற்கு வங்க அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதாக அவர்கள் தாக்கல் செய்த ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போது அவர்களது சொத்து விபரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் தேர்தலில் போட்டியிடும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் அவர்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளனர். 

இதில் அவர்கள் 2006 ம் ஆண்டு தாக்கல் செய்த சொத்து மதிப்புக்கும், தற்போதைய சொத்து மதிப்புக்கும் பெரிய வித்தியாசம் இருப்பது தெரியவந்துள்ளது. 4 அமைச்சர்கள் உட்பட 8 எம்.எல்.ஏக்களின் சொத்துக்கள் 5 ஆண்டுகளில் 20 லட்சத்திற்கும் மேல் கூடியுள்ளது. இதில் ஆர்.எஸ்.பி. கட்சியை சேர்ந்தவரும், அமைச்சருமான விஸ்வநாத் சவுத்ரியின் சொத்து 43 லட்சம் கூடியுள்ளது. பாலூர்காட் தொகுதி எம்.எல்.ஏவின் சொத்து மதிப்பு தற்போது 309 சதவீதம் அதிகரித்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மயினூல்கக், அபுகெனா மற்றும் அபுகெர்கர் ஆகியோரின் சொத்துக்கள் முறையே 50 லட்சம், 36 லட்சம் மற்றும் 15 லட்சம் என 5 ஆண்டுகளில் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்