முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமலை சந்தித்தார் ரஜினிகாந்த்

புதன்கிழமை, 30 ஜனவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜன.31 - விஸ்வரூபம் பட பிரச்சினை தொடர்ந்து வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் அளித்த உருக்கமான பேட்டியை அடுத்து கமலின் நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிகாந்த் அவரை நேரில் சந்தித்தார்.

விஸ்வரூபத்திற்கு தொடர்ந்து வரும் எதிர்ப்பை அடுத்து நேற்று கமல்ஹாசன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை மேற்கொண்டார். அப்போது அவர் மதசார்பற்ற மாநிலம் தேடி போக போவதாகவும், அப்படி ஒரு மாநிலம் இந்தியாவில் இல்லை என்றால், வேறு நாட்டிற்கு செல்லப் போவதாகவும் உருக்கமாக கூறினார்.

இதனை அடுத்து திரைத்துறையினரின் ஆதரவு கமலுக்கு குவிந்துள்ள நிலையில், அவரது நண்பர் நடிகர் ரஜினி காந்த் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமலின் வீட்டிற்கு நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்