இந்திய சுற்றுப் பயணம் நல்ல அனுபவம்: கைல்ஸ் பேட்டி

புதன்கிழமை, 30 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஜன. 31 - இந்திய சுற்றுப் பயணம் நல்ல படிப்பி னையையும், அனுபவத்தையும் தந்தது என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியி ன் பயிற்சியாளரான ஆஷ்லே கைல்ஸ் தெரிவித்தார். மேலும், இந்திய அணிக்கு எதிரான இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி மோசமாக ஆட வில்லை என்றும், அனுபவம் இல்லாத இங்கிலாந்து அணிக்கு இந்தப் பயணம் நல்ல படிப்பி னையாக அமைந்தது என்றும் அவர் கூறியிருக்கிறார். இங்கிலாந்து அணியின் பயிற்சியாள ராக கைல்ஸ் பொறுப்பேற்ற பின்பு ஒரு நாள் போட்டித் தொடரில் இது அவருக்கு முதல் சுற்றுப் பயணமாகும். 

இதற்கு முன்பாக ஜிம்பாப்வே வீரர் ஆன்டி பிளவர் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்தார். கடந்த நவ ம்பர் மாதம் கைல்ஸ் புதிய பயிற்சியா ளராக பொறுப்பேற்றுக் கொண்டார். 

தவிர, இந்திய அணிக்கு எதிராக நடந்த இந்தத் தொடரின் மூலம் தானும் ஒரு சில பாடங்களைக் கற்றுக் கொண்ட தாகவும் ஆஷ்லே தெரிவித்து இருக்கிறார். 

இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் நிருபர்களைச் சந்தித்த கை ல்ஸ் அவர்களது கேள்விக்கு பதில் அளி க்கையில் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். 

இந்தியப் பயணம் குறித்து அவரிடம் கேட்ட போது, அனுபவம் இல்லாத வீரர்களை வைத்துக் கொண்டு நாங்கள் சிறப்பாக ஆடினோம். 2 - 3 என்பது மிக மோசமான தோல்வி அல்ல என்றார் அவர். 

மேலும் , இந்தத் தொடரில் நாங்கள் வெற்றி பெறவில்லை. ஆனால் நாங்கள் நிறைய பாடங்களைக் கற்றுக் கொண்டோம். நானும் இந்தத் தொடரில் நிறைய பாடங்களைக் கற்றுக் கொண்டே ன். ஒவ்வொரு போட்டியிலும் வித்தி யாசமான அனுபவம் கிடைத்தது என்று ம் அவர் தெரிவித்தார். 

மிகவும் அழகான இந்த இடத்தில் (இந் தியா) கிரிக்கெட் விளையாடியது நல்ல மகிழ்ச்சியை அளித்தது. நாங்கள் தோற் றது ஏமாற்றத்தை அளித்த போதிலும், நாங்கள் நிறைய பாடங்களைக் கற்றுக் கொண்டோம் என்றும் ஆஷ்லே கூறி னார். 

ஆல்ரவுண்டர் ஜோ ரூட் இந்தத் தொட ரில் சிறப்பாக ஆடினார். 4 -வது போட்டியில் அவர் 45 பந்தில் 57 ரன் எடுத்தார். தரம்சாலாவில் நடந்த ஆட்டத்தில் அவ ர் 31 ரன் எடுத்தார். இது எனக்கு மகிழ்ச் சியையும், ஆச்சரியத்தையும் அளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

ஜோவின் முதல் சுற்றுப் பயணம் சிறப் பாக இருந்தது. அவர் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரராக உருவாகி வருகிறார். அவர் விரைவில் 3 பிரிவிலு ம் ஆடும் தகுதி உள்ளவராக வருவார். அதே போல ஸ்பின்னர் டிரட்வெலும் இந்தத் தொடரில் நன்கு பந்து வீசினார் என்றும் கைல்ஸ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: