முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டேவிஸ் கோப்பை: கொரிய அணியை இந்தியா சமாளிக்குமா?

வியாழக்கிழமை, 31 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி,ஜன. 1 - டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் கொரிய அணிகள் புதுடெ ல்லியில் இன்று பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன. இந்திய அணியில் முன்னணி வீரர்கள் பங்கேற்காததால் கொரிய அணியை சமாளிக்குமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய ஓசியானியா குரூப் -1 பிரிவு போட்டி தலைநகர் டெல்லியில் இன்று துவங்க இருக்கிறது. 

இதில் இந்தியா மற்றும் கொரிய அணிகள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரி வு ஆட்டங்களில் மோத இருக்கின்றன. 

இந்திய அணியில் லியாண்டர் பயஸ் ஒருவர் மட்டும் அனுபவம் வாய்ந்த வீர ராக களம் இறங்குகிறார். மற்ற மூன்று வீரர்கள் அறிமுக வீரர்களாவர். 

எனவே அனுபவம் இல்லாத அறிமுக வீரர்களுடன் களம் இறங்கும் இந்திய அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது. 

இந்திய அணியில் லியாண்டர் தவிர, வி.எம். ரஞ்சித், விஜயந்த் மாலிக் மற் றும் புரவ் ராஜா ஆகிய வீரர்கள் முதன் முறையாக களம் இறங்குகின்றனர்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்கள் இல்லாமல் இரண்டாவது முறையாக தொடர்ந்து களம் இறங்குகிறது இந்தியா. 

இந்திய டென்னிஸ் அணியில் உள்ள முன்னணி வீரர்களுக்கும், அகில இந்தி ய சங்கத்திற்கும் இடையே தேவையில் லாத சர்ச்சை எழுந்துள்ளது. இது இன் னும் தீரவில்லை. பிரச்சினைக்கு முடிவு காணப்படவில்லை.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந் தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அப்போது மகேஷ் பூபதி மற் றும் ரோகன் பொபண்ணா இருவரும் ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் நீக்கப்ப ட்டாதால் அணியில் இடம் பெறவில் லை. 

இதனைத் தொடர்ந்து 11 முன்னணி வீர ர்கள் சோம்தேவ் வர்மன் தலைமையில் சில கோரிக்கைகளை முன் வைத்து போர்க் கொடி தூக்கினர். இது தொடர் பாக டென்னிஸ் சங்கத்திற்கும், வீரர்க ளுக்கும் இடையே சமரசம் ஏற்படவில் லை. 

கொரிய அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் முன்பு, இந்திய அணி பல ம் வாய்ந்த அணியாக கருதப்பட்டது. ஆனால் தற்போது முன்னணி வீரர்கள் பங்கேற்காததால் பலவீனமான அணியாக உள்ளது. 

எனவே அனுபவம் இல்லாத இளம் வீர ர்களைக் கொண்ட இந்திய அணி கொரி ய அணியை சமாளிக்குமா? என்ற சந் தேகம் அனைவரிடமும் கிளம்பியுள்ளது. 

டேவிஸ் கோப்பையில் இந்திய அணிக்கு தலைமை தாங்கும் பயஸ் 49 -வது முறையாக இதில் பங்கேற்கிறார். அவ ருக்கு இந்த முறை கடும் சோதனை  காத்திருக்கிறது. 

பயஸ் சனிக் கிழமை போட்டியில் இர ட்டையர் பிரிவில் கலந்து கொள்கிறார். அதற்கு முன்னதாக வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்க இருக் கும் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தை அவர் எப்படி வழி நடத்துவார் என்று அனைவரும் ஆவலோடும் காத்திருக்கின்றனர். 

இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி வீரர்கள் மூட் அவுட்டாகி இருந் தனர். கடந்த செவ்வாய்க் கிழமை பய ஸ் அணியில் இணைந்ததும் அணி வீரர் கள் மத்தியில் உற்சாகம் கிளம்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்