ஏழுமலையான் கோவிலில் தரிசனம்செய்த சச்சின் டெண்டுல்கர்

சனிக்கிழமை, 2 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

திருப்பதி, ஜன, - 3 -  திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் இன்று காலையில் சச்சின் டெண்டுல்கர் சாமி தரிசனம் செய்தார். ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி வெங்கடாசலபதி இந்தியாவிலேயே பணக்கார கடவுள் என்று அழைக்கப்படுகிறார். இந்த கோவிலுக்கு இந்திய முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். ஏராளமான விஐபிக்களும் ஏழுமலையானைக் காண வருகின்றனர். சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த விசேஷ தினம். இன்று இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் சாமி தரிசனம் செய்ய திருப்பதி வந்திருந்தார். இன்று அதிகாலை கோயிலுக்கு வந்த அவர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்திருந்தார். சுப்ரபாத சேவையில் கலந்து கொண்ட அவர் பக்தியுடன் சாமி கும்பிட்டார். அவருக்கு, லட்டு பிரசாதமும், தீர்த்தமும் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: