இந்தியா சிமெண்ட்ஸ் துணைத்தலைவரானார் தோனி

சனிக்கிழமை, 2 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

சென்னை, ஜன. - 3 - சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராக (கவுரவ பதவி) இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் ஒரு வார காலம் நடைபெறும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் இந்தியா சிமெண்ட்ஸ் அணிக்காக டோனி விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா சிமெண்ட்ஸ் அணியில் அவரது பெயரும் இடம் பெற்றிருக்கிறது. இருப்பினும் நேற்று தொடங்கிய கார்ப்பரேட் அணிகளுக்கான கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் அவர் களம் இறங்கவில்லை. நாக்பூரில் நடந்த இந்த ஆட்டத்தில் அஸ்வின் தலைமையில் களம் கண்ட இந்தியா சிமெண்ட் அணி 125 ரன் வித்தியாசத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் அணியை வீழ்த்தியது. முன்னதாக, ஆஸ்?ட்ரேலிய டெஸ்ட் தொடருக்காக ஓய்வு தேவை என்று கூறி இரானி கோப்பை கிரிக்கெட்டில் இருந்து டோனி விலகியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: