முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் வாரிய வேண்டுகோள் - புறக்கணித்தது இலங்கை

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கொழும்பு, ஏப்.21 - ஐ.பி.எல். தொடரில் விளையாடும் இலங்கை கிரிக்கெட் வீரர்களை மே 15 ம் தேதிவரை விளையாட அனுமதிக்க வேண்டும் என்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் நிராகரித்தது.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பலர் கலந்துகொண்டு விளையாடி வருகிறார்கள். குறிப்பாக குமார் சங்ககாரா டெக்கான் சார்ஜர்ஸ் அணியி கேப்டனாகவும், மகேளா ஜெயவர்த்தனே கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியின் கேப்டனாகவும் மேலும்   தில்ஷான், மலிங்கா, பெரைரா போன்ற வீரர்களும் விளையாடி வருகிறார்கள். இந்நிலையில் இலங்கை அணி அடுத்த மாத கடைசியில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக டுவெண்டி - 20 , ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கான இலங்கை அணியின் கேப்டனாக திலகரத்னே தில்ஷான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இதற்காக ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்களை  நாடு திரும்புமாறு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. ஐ.பி.எல். போட்டிகள் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த நிலையில் முக்கிய சில அணிகளில் உள்ள முக்கிய வீரர்கள் இல்லாமல் போனால் அந்த ஐ.பி.எல்.அணிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம், இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் ஒரு வேண்டுகோளை வைத்தது. அதாவது இலங்கை வீரர்கள் குறைந்தது மே 15 ம் தேதி வரையாவது ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாகம் நிராகரித்துவிட்டது. இலங்கை வீரர்கள் மே 5 ம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்று அது கண்டிப்பாக தெரிவித்துவிட்டது. இங்கிலாந்திற்கு எதிரான மிகப்பெரிய தொடரில் கலந்துகொள்ள வேண்டி இருப்பதால் அதற்கான ஆயத்த பயிற்சிகளில் வீரர்கள் ஈடுபட வேண்டியது அவசியம் என்று ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாகிகள் தெரிவித்தனர். 

இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் அலுத்கமகேயும்,  ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகமும், இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளனர். இதுகுறித்து அமைச்சரும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகமும் நீண்ட நேர ஆலோசனைக்கு பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் இந்த முடிவால் ஐ.பி.எல். அணிகளுக்கு பெரும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கை வீரர்கள் இருவர் கேப்டன்களாக உள்ள இரண்டு ஐ.பி.எல். அணிகளுக்கும் இதனால் பெரிய சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்