விளையாட முடியாத ஸ்டெய்ன்! பாகிஸ்தான் தோல்வி!

திங்கட்கிழமை, 4 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

ஜொகான்னஸ்பர்க், பிப். - 5 -  ஜொகான்னஸ்பர்கில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாளான இன்று உணவு இடவேளைக்கு முன்பே பாகிஸ்தான் தனது இரண்டாவது இன்னிங்சில் 268 ரன்களுக்கு சுருண்டது. தென் ஆப்பிரிக்கா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 1- 0 என்று முன்னிலை வகிக்கிறது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் ஸ்டெய்னின் வேகத்திற்கு ்டு கொடுக்க முடியாமல் 49 ரன்களுக்கு சுருண்டது. தென் ஆப்பிரிக்கா 204 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தாலும் பாலோ ஆன் கொடுக்கவில்லை, இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது தென் ஆப்பிரிக்கா. பாக். அணி 2வது இன்னிங்சில் 268 ரன்களுக்கு சுருண்டது. இனி, பாகிஸ்தான் 3- 0 உதையை தவிர்ப்பது மிகவும் கடினம் என்றே தொன்றுகிறது. டேல் ஸ்டெய்ன் முதல் இன்னிங்ஸில் 8 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு 2வது இன்னிங்ஸில் 52 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். விக்கெட் கீப்பர் ஏ.பி. டிவிலியற்ஸ் இந்தப் போட்டியில் சதம் எடுத்ததோடு 11 கேட்ச்களை பிடித்து உலக சாதனையை சமன் செய்துள்ளார். ஆனாலும் ஆட்ட நாயகன் விருது டேல் ஸ்டெய்னின் அபார பந்து வீச்சிற்கே கிடைத்தது. உண்மையில் அபாரமான ஸ்விங் பந்து வீச்சு. லெக் அன்ட் மிடிலில் பிட்ச் ஆகி சீராக பந்து அவுட் ஸ்விங் ஆனது. மிகவும் அபாயகரமான பந்து வீச்சாளராகியுள்ளார் ஸ்டெய்ன், இந்தியா தென் ஆப்பிரிக்கா செல்லும்போது ஒரு வழி செய்வார் என்று எதிர்பார்க்கலாம். 

இன்று சிறப்பாக தன்னால் இயன்ற அளவு நல்ல உத்தியுடன் விளையாடிய ஆசாத் ஷபிக் 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டெய்னின் அவுட் ஸ்விங்கருக்கு காலிஸின் அற்புத கேட்சிற்கு வெளியேறினார். மிஸ்பா உல் ஹக் 64 ரன்களுக்கு நன்றாகவே விளையாடினார். ஆனால் மீண்டும் டேல் ஸ்டெய்னின் விளையாட முடியாத ஒரு பந்து வந்தது அவுட் ஆனார் மிஸ்பா. விக்கெட் கீப்பர் சர்பராஸ் அகமட் பிலாண்டர் வீசிய பந்தை விடுவதா வேண்டாமா என்ற தவிப்பிலேயே தொட்டு விட பந்து ஸ்டம்பை தாக்கியது.

அஜ்மலை மோர்கெல் வீழ்த்தினார். உமர் குல் களமிறங்கி 3 நல்ல பவுண்டரிகளை அடித்து 23 ரன்களில் ஸ்டெய்னின் பந்தில் டிவிலியர்ஸிடம் ஆட்டமிழந்தார். கடைசியாக ஜுனைத் கான் இப்பவோ அப்பவோ என்று விளையாடி கடைசியில் எல்.பி ஆனார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: