சத்தியமா சொல்றேன், இம்புட்டுப் பணத்தை நான் பார்த்ததே இல்லை... மோரிஸ்!

திங்கட்கிழமை, 4 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

ஜோஹன்னஸ்பர்க், பிப், - 5 - எனது வாழ்க்கையில் இப்படி ஒரு பணத்தை நான் பார்த்ததே இல்லை சற்றே அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் கூறியுள்ளார் தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ். சென்னையில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் மோரிஸ் ரூ.3.3 கோடிக்கு ஏலம் போனார். அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. இவரை ஏலத்தில் எடுக்க மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்கள?ர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகியவை கடுமையாக மோதின. ஆனால் சென்னை தட்டிச் சென்று விட்டது.
தன்னை ரூ. 3.3 கோடிக்கு ஏலம் எடுத்தது ஆச்சரியமாக இருப்பதாக கூறியுள்ளார் மோரிஸ்.

இதை ஷேர் செய்திடுங்கள்: