டெஸ்ட அணியில் விரைவில் இடம் பிடிப்பேன்: ரெய்னா

செவ்வாய்க்கிழமை, 5 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, பிப். 6 - இந்திய டெஸ்ட் அணியில் விரைவில் இடம் பிடிப்பேன் என்று முன்னணி பே ட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா நம்பிக் கை தெரிவித்தார். 

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக் கை நட்சத்திரங்களில் ஒருவரான சுரே ஷ் ரெய்னா தற்போது ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். 

ஆனால் டெஸ்ட் போட்டியில் ரெய் னா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோருக் கு வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும், அவர்களால் அதில் தாக்குப் பிடிக்க முடியவில்லை. 

எனவே உத்தரபிரதேச வீரரான ரெய் னா மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க ஆர்வமாக இருக்கிறார். இதற் காக நன்கு பயிற்சி எடுத்து வருகிறார். 

மும்பையில் தற்போது இராணி கோப் பை கிரிக்கெட்  போட்டி நடந்து வருகிறது. இடையே நிருபர்களைச் சந்தித்த அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறிய தாவது - கடந் த 10 போட்டிகளில் நா ன் சிறப்பாக ஆடி வருகிறேன். அதிக ரன்களை எடுத்து வந்துள்ளேன். 

தற்போது நடக்கும் இராணி கோப்பை யிலும் எனது ஆட்டம் தொடரும். இத ன் மூலம் டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பெறுவேன். 

தற்போது நல்ல பார்மில் இருக்கிறேன். இது நல்ல வாய்ப்பாக அமையும் என கருதுகிறேன். மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பது எனது உச்ச நோக்கமாகும். இதற்காக நான் கடுமையாக உழைத்து வருகி          றேன். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அணியி ல் இடம் பெற வேண்டும் என்பது எனது நோக்கம். அதில் இடம் கிடை த்தா ல் நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு சவா லாக இருப்பேன். 

கடுமையாக உழைத்தால் நிச்சயம் பல ன் கிடைக்கும். மீண்டும் அணியில் இடம் கிடைத்தால் தொடர்ந்து 50 அல் லது 60 டெஸ்டுகளில் விளையாடலாம் என்று கருதுகிறேன். 

எந்த வித மன அழுத்தத்திற்கும் இடம் அளிக்காமல் போட்டியில் ஆட வேண்டும் என்பது தான் எனது எண்ணம். 

தற்போது நல்ல அனுபவம் ஏற்பட்டு விட்டது. எனவே மன அழுத்தம் எதுவு ம் என்னை பாதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: