முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரப்பன் பற்றிய சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்கி விட்டேன்

புதன்கிழமை, 6 பெப்ரவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, பிப்.7 - சந்தன வீரப்பன் பற்றிய சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்கிவிட்டேன். இம்மாதம் வனயுத்தம் படம் திரைக்கு வருகிறது என்று படத்தின் இயக்குனர் குப்பி ரமேஷ் நேற்று நிருபர்களிடம் கூறினார். க்இது குறித்து விவரம் வருமாறு:-

குப்பி, காவலர் குடியிருப்பு போன்ற படங்களை இயக்கியவர் ரமேஷ். இவர் தற்போது இயக்கி திரைக்கு வர உள்ள படம் வனயுத்தம். இந்த படத்தில் அர்ஜூன், கிஷோர், சம்பத்ராம், விஜயலட்சுமி என முன்னணி நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். கதை சந்தன வீரப்பன் தொடர்பானது. இதனால் பட பிடிப்பு முடிந்து படம் திரைக்கு வரவேண்டிய நேரத்தில் படத்தில் சில சர்ச்சைக்குறிய காட்சிகள், வசனங்கள் இருப்பதாக கூறி அவற்றை நீக்க வேண்டும் என்று வீரப்பன் மனைவி முத்துலட்சுமி மற்றும் பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கூறியிருந்தனராம். இதை ஏற்று அவர்கள் சொன்ன காட்சி, வசனங்களை நீக்கியுள்ளார் இயக்குனர். இம்மாதம் படம் திரைக்கு வருகிறது. படத்தை வேந்தர் மூவிஸ் சார்பில் மதன் ரிலிஸ் செய்கிறார்.

இந்த சூழலில் இயக்குநர் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒரு படைப்பாளிக்கு சமூகத்தில் காணும் பிரச்சிகளை யாருக்கும் பாதகம் இல்லாமல் நடுநிலையோடு சொல்லும் உரிமையும், சுதந்திரமும் இருக்கிறது. அந்த வகையில் ராஜீவ்காந்தி படுகொலையை கருவாக வைத்து எடுக்கப்பட்ட படம் குப்பி. இந்த படம் திரைக்கு வந்தபோது யாரையும் புண்படுத்தவில்லை. எந்த பிரச்சினையும் எனக்கு ஏற்படவில்லை. ஆனால் தற்போது திரைக்கு வரவிருக்கும் வனயுத்தம் படத்தை ஏழு ஆண்டுகள் போராடி வீரப்பனுடன் பழகிய 250 பேரை சந்தித்து அவர்களிடம் வீரப்பனிடம் உள்ள பல புதிய தகவல்களை சேகரித்து நடுநிலையோடு படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பதினொரு ஆண்டுகள் இந்த கதையை ரிசர்ச் செய்தேன். யாரையும் புண்படுத்தி படம் எடுக்க மாட்டேன்.

படத்தில் வரும் மூன்று காட்சிகளை நீக்க வேண்டும் என்று வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கூறினார். அதை ஏற்று காட்சி நீக்கப்பட்டுள்ளது. தமிழ், கன்னடத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளன. தெலுங்கில் டப் செய்து இருக்கிறோம். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் யூ சான்று கொடுத்துள்ளனர். இம்மாதம் 15 -ம் தேதி படம் திரைக்கு வருகிறது. அடுத்து பிரபாகரன் வாழ்க்கை குறித்து படம் எடுக்க திட்டமிட்டு இருக்கிறேன். இந்த படம் குறித்து வனயுத்தம் திரைக்கு வந்த பிறகு விரிவாக கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்