மே.இ.தீவுக்கு எதிரான ஒரு நாள்:: ஆஸ்திரேலியா வெற்றி

வியாழக்கிழமை, 7 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

கான்பெரா, பிப். 7- மே.இ.தீவு அணிக்கு எதிராக கான்பெ ராவில் நடைபெற்ற 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலி யா 39 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெ ற்றது. இதன் மூலம் இந்தத் தொடரை 3- 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தரப்பில், ஷேன் வாட்சன் சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அவருக்கு பக்கபலமாக, ஹியூக்ஸ், பிஞ்ச் மற்றும் பெய்லி ஆகியோர் ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, பால்க்னர் சிறப்பாக பந்து வீசி 4 முக்கிய விக்கெ ட்டைக் கைப்பற்றினார். அவருக்கு ஆத ரவாக ஜான்சன், ஸ்டார்க், மெக்கே மற் றும் மேக்ஸ்வெல் ஆகியோர் பந்து வீசி னர்.  

மேற்கு இந்தியத் தீவுகள் அணி கேப்ட ன் டேரன் சம்மி தலைமையில் ஆஸ்தி ரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் மைக்கேல் கிளார்க் தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நட த்த திட்டமிடப்பட்டது. இதன் 3-வது போட்டி கான்பெராவில் உள்ள மனு கா ஓவல் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. 

இதில் முதலில் களம் இறங்கிய ஆஸ்தி ரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவ ரில் 7 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்னைக் குவித்தது. இதில் 1 வீரர் சதமும், 1 வீர ர் அரை சதமும் அடித்தனர். 

காயத்திற்குப் பின்பு மீண்டும் களம் இறங்கிய துவக்க வீரர் வாட்சன் சதம் அடி த்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். அவர் 111 பந்தில் 122 ரன் எடுத்தார். இதில் 12 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். 

ஹியூக்ஸ் 93 பந்தில் 86 ரன் எடுத்தார். தவிர, பெய்லி 44 ரன்னும், பிஞ்ச் 38 ரன் னும், கேப்டன் கிளார்க் 15 ரன்னும் எடு த்தனர். 

மே.இ.தீவு அணி சார்பில், டேரன் சம் மி 49 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட்எடுத்தார். தவிர, சுனில் நரீன் 2 விக்கெ ட்டும், ரோச், ஜே. பிராவோ மற்றும் பொல்லார்டு ஆகியோர் தலா 1 விக்கெ ட் எடுத்தனர்.

மே.இ.தீவு 330 ரன்னை எடுத்தால் வெ ற்றி பெறலாம் என்ற கடின இலக்கை ஆஸி. வைத்தது. ஆனால்அடுத்து களம் இறங்கிய அந்த அணி 47.3 ஓவரில் 290 ரனனில் ஆட்டம் இழந்தது. 

இதனால் இந்த 3 -வது போட்டியில் ஆஸி. அணி 39 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3- 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

மே.இ.தீவு தரப்பில், டிவைன் பிரா வோ, 96 பந்தில் 86 ரன் எடுத்தார். இதி ல்  7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்க ம். தவிர, ஜே. பிராவோ 51 பந்தில் 50 ரன்னையும், பொவெல் 47 ரன்னையும், ரஸ்செல் 43 ரன்னையும், தாமஸ் 19 ரன் னையும் எடுத்தனர். 

ஆஸி. அணி சார்பில், பால்க்னர் 48 ரன் னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். தவிர, மெக்கே 2 விக்கெட்டும், ஸ்டா ர்க், ஜான்சன் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்த னர். இந்தப் போட்டியின் ஆட்டநாயக னாக வாட்சன் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: