உலக ஹாக்கி லீக்: போட்டி: முன்னணி வீரர் சந்தீப் சிங் நீக்கம்

வியாழக்கிழமை, 7 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, பிப். 7 - உலக ஹாக்கி லீக் போட்டிக்காக அறி விக்கப்பட்ட 18 பேர் கொண்ட இந்திய அணியில் நட்சத்திர வீரரான டசந்தீப் சிங் இடம் பெறவில்லை. ஹீரோ உலக ஹாக்கி லீக் ரவுண்டு - 2 போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள தயான் சந்த் அரங்கத்தில்  வரும் 18 - ம் தேதி முதல் 24 -ம் தேதி வரை நடக்கிறது. 

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக 18 பேர் கொண்ட இந்திய அணியை அகில இந்திய ஹாக்கி கழகம் அறிவித் தது. சர்தார் சிங்கை கேப்டனாக கொ  ண்டஇந்த அணியில் பிளிக் ஷாட் நிபு ணரான சந்தீப் சிங் இடம் பெறவில் லை. 

இந்தியன் ஹாக்கி லீக் தொடர் தற் போது நடந்து வருகிறது. இந்தத் தொ டரில் சந்தீப் சிங் மொத்தம் 11 கோலை அடித்து அதிக கோல் அடித்த வீரர்களி ன் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். 

இருந்த போதிலும், உலக ஹாக்கி லீக் தொடருக்கு சந்தீப் சிங் தேர்வு செய்யப் படாதது பலருக்கு  ஆச்சரியத்தை அளி த்துள்ளது.

இந்திய ஹாக்கி சங்கத்தின் தேர்வுக் குழு உறுப்பினர் சையது அலி, பயிற்சி யாளர் மைக்கேல் நாப்ஸ் ஆகியோர் வீரர்களை தேர்வு செய்தனர். மத்திய அரசின் பார்வையாளராக ஹர்பிந்தர் சிங் பங்கேற்றார். 

முன்னணி வீரரான சந்தீப் சிங் முக்கிய அணியில் இடம் பெறாதபோதிலும், 6 பேர் கொண்ட மாற்று வீரர்கள் பட்டிய லில் இடம் பெற்று உள்ளார். 

தற்போது நடைபெற்று வரும் இந்திய ஹாக்கி லீக்கில் வீரர்களின் பங்களிப் பை வைத்து உலக ஹாக்கி லீக்கிற் கா  ன வீரர்கள் தேர்வு நடைபெற்றதாக இந்திய ஹாக்கி சங்கம் விடுத்துள்ள அறிக் கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

சமீப காலத்தில் இந்திய அணியை சிற ப்பாக வழி நடத்தி செல்வதால் சர்தார் சிங் தொடர்ந்து கேப்டனாக நீடிக்கிறா ர். துணைக் கேப்டனாக பிளிக் ஷாட் நிபுணரான வி.ஆர்.ரகுநாத் தேர்வு  செய்யப்பட்டு உள்ளார். 

குர்மைல் சிங், உத்தப்பா, ஆகாஷ் தீப் சிங் மற்றும் யுவராஜ் வால்மீகி ஆகிய 4 வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். 

கடந்த வருடம் டிசம்பர் மாதம் டோ காவில் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி ப் போட்டி நடந்தது. இதில் இந்திய அணி 2 -வது இடம் பிடித்தது. அந்த அணியில் மேற்கண்ட 4 வீரர்களும் இடம் பெற்று இருந்தனர். 

மேலும் தற்போது நடந்து வரும் இந்தி ய ஹாக்கி லீக் போட்டியில் சிறப்பாக ஆடி வருவதைத் தொடர்ந்து குர்ஜிந்தர் சிங், மாலக் சிங், மந்தீப் சிங் மற்றும் ஜிங்லெனா சிங் ஆகியோர் உலக ஹா க்கி லீக்கிற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 

2014 -ம் ஆண்டு நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹேக் நகரில் ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கான தகு திச் சுற்று போட்டியாக உலக ஹாக்கி லீக் போட்டி கருதப்படுகிறது. 

உலக ஹாக்கி லீக் ரவுண்டு - 2 போட்டி க்கான பயிற்சி முகாம் டெல்லியில் உள்ள தயான் சந்த் அரங்கத்தில் வரும் 11 -ம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இந்திய ஹாக்கி லீக் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: