ரூ. 2300 கோடி வருமான வரிகட்டுமாறு பி.சி.சி.ஐ.க்கு உத்தரவு

புதன்கிழமை, 6 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர், பிப். 7 - ரூ. 2300 கோடி வருமான வரிகட்டுமாறு கிரிக்கெட் வாரியத்துக்கு வருமானவரித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் மேற்கொள்ளும் அனைத்துப் பணிகளும் வணிக நோக்கிலானவைதான். எனவே அது கடந்த ஏழு ஆண்டுளாக கட்ட வேண்டிய வரிபாக்கி ரூ. 2300 கோடியாகும். அதை உடனடியாக கட்ட வேண்டும் என்று கிரிக்கெட் வாரியத்திற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம். இந்த புதிய விவகாரம் குறித்து சென்னையில் கூடி விவாதிக்கவுள்ளது கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு. மேலும் இது குறித்த சட்ட ஆலோசனை பெற குழு ஒன்றையும் கிரிக்கெட் வாரியம் அமைத்துள்ளதாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: