முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் - புதுச்சேரியில் திடீர் கோடை மழை

வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப். 22​- கோடை வெயிலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழ்நாடு​மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் திடீர் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று காலை அயனாவரம், ஆதம்பாக்கம், கே.கே.நகர், கீழ்ப்பாக்கம், கோடம்பாக்கம், அசோக்நகர், தாம்பரம் உள்பட பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்தது. கோடைமழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் நிருபர்களிடம் கூறியதாவது:

கன்னியாகுமரி கடல் பகுதியில் வான்வெளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டம் மாரண்ட ஹள்ளியில் அதிக அளவான 10 சென்டி மீட்டர் மழை பெய்திருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் 8 செ.மீ., குன்னூரில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது. பட்டுக்கோட்டை, செங்கோட்டை, தென்காசி, கரூர், ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழையும், ஆயக்குடி, பேராவூரணி, திருமங்கலம் ஆகிய இடங்களில் சராசரியாக 4 செ.மீ. மழையும் பெய்திருக்கிறது.

இது தவிர தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஆங்காங்கே சிறிதளவு மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழ்நாடு-​புதுச்சேரி கடலோர பகுதி மற்றும் தமிழ்நாட்டின் உள் பகுதியில் அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் நாளையும் (இன்று) மழை பெய்யலாம். கோடை காலத்தில் பலத்த இடி​மின்னலுடன் மழை பெய்யும்.

எனவே, மழை பெய்யும் போது உயர்ந்த ஒற்றை மரம்,  பரந்த சமவெளி பகுதி ஆகியவற்றில் பொதுமக்கள் நிற்பதை தவிர்க்க வேண்டும். 

இவ்வாறு ரமணன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்