முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 மீனவர்களின் குடும்பத்துக்கு அ.தி.மு.க. சார்பில் நிதி

வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.22 - இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் நிதியுதவி ஜெயலலிதாவின் சார்பில் நிர்வாகிகள் நேரில் சென்று வழங்கினர். இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2.4.2011 அன்று கடலில் மீன் பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் விக்டர், ஜான் பால், அந்தோணிராஜ் மற்றும் மாரிமுத்து ஆகியோர் இலங்கை கடற்படையால் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்டதையொட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்து இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து நேற்று (21.4.2011)  அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலிலதா சார்பாக, கழக மீனவர் பிரிவுச் செயலாளர் கே.கே. கலைமணி, மீனவர் பிரிவு இணைச் செயலாளர் ஜெனிபர் சந்திரன், வட சென்னை மாவட்ட செயலாளர் டி. ஜெயக்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர், இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட, மண்டபம் ஒன்றியம், தங்கச்சிமடம் ஊராட்சியைச் சேர்ந்த  விக்டர், ஜான் பால், அந்தோணிராஜ், மாரிமுத்து ஆகியோருடைய இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களுடைய குடும்பத்தினரிடம் அ.தி.மு.க. சார்பில் தலா 1,00,000/​ ரூபாயை வழங்கி ஆறுதல் கூறினார்கள்.

அப்போது, அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் அ. அன்வர்ராஜா, ராமநாதபுரம் மாவட்டசெயலாளர் கே.சி. ஆணிமுத்து உட்பட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago