முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லைக்குள் நுழைய முயன்ற பாக்., வீரர் சுட்டுக்கொலை

வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர்,பிப்.16 - இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் வீரர் ஒருவரை நமது ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான், அந்த வீரர் உடலை ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. 

இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ செய்வதற்காக எல்லைக்கட்டுப்பாடு கோடு நெடுகிலும் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி இந்திய பாதுகாப்பு முகாம்கள் மீதும் சுடுவதும் எல்லைக்கட்டுப்பாடு கோட்டை மீறுவதும் வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த விழாழக்கிழமை இரவு பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர், ஹோய் ரட்டா என்ற பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோட்டை கடந்து ஊடுருவ முயன்றுள்ளார். இதை பார்த்த இந்திய ராணுவ வீரர்கள் அவரை சுட்டுக்கொன்றுவிட்டனர். இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இருநாடுகளின் ராணுவ அதிகாரிகள் கூட்டம் நடந்தது. அப்போது சுட்டுக்கொல்லப்பட்ட ராணுவ வீரரின் உடலை கொடுக்கும்படி பாகிஸ்தான் கேட்டுக்கொண்டது. இதற்கு இந்தியா சம்மதித்துள்ளது.

கடந்த 2 ஒருமாத காலமாக எல்லைக்கட்டுப்பாடு கோடு நெடுகிலும் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி இந்திய காவல்நிலையங்கள் மீது துப்பாக்கியால் சுட்டு வருகிறார்கள். பூஞ்ச் மாவட்டத்தில் கடந்தமாதம் பாகிஸ்தான் வீரர்கள் சுட்டதில் இந்திய வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். அவர்களில் ஒரு வீரரின் தலையை பாகிஸ்தான் ராணுவத்தினர் துண்டித்துக்கொண்டு சென்றுவிட்டனர். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனையொட்டி நடந்த கொடியமர்வு கூட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மன்னிப்பு கேட்டதால் இந்தியா பொறுத்துக்கொண்டது. இல்லாவிட்டால் பாகிஸ்தானுக்கு பாதகமான விளைவு ஏற்பட்டிருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்