முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய வான்வெளியில் விழுந்த எரிநட்சத்திர கல்: பலர் காயம்!

வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ, பிப். 16 - மிகப் பெரிய விண்கல் ஒன்று நேற்று பூமியை கடக்க இருக்கும் நிலையில் ரஷ்யாவின் வான்வெளியில் எரி நட்சத்திரம் ஒன்று விழுந்தது. இதன் அதிர்வலைகளால் வீட்டு கண்ணாடிகள் உடைந்தும் மேற்கூரைகள் விழுந்தும் சுமார் 400 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1500 கிலோ மீட்டர் தொலைவில் யுரால் பகுதியில் உள்ள செல்யபின்ஸ்க் என்ற இடத்தில் நேற்று மிகப் பெரிய எரிநட்சத்திரம் விழுந்து வெடித்துச் சிதறியது. அப்போது நிலநடுக்கத்தைப் போல மிகப் பெரிய அதிர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன.

எரி நட்சத்திரத்திரம் வெடித்துச் சிதறிய போது மிகப் பெரிய வெடி சப்தத்தை கேட்டதாகவும் அதைத் தொடர்ந்து பெரிய அளவில் தீப் பிழம்பு எழுந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த வெடிப்பின்போது சில வீடுகளின் கூரைகள் நொறுங்கின, பல வீடுகளின் ஜன்னல்கள் வெடித்துச் சிதறின. தொலைத் தொடர்பு சேவைகளும் அறுந்து விட்டன.

இந்த அதிர்வால் ஒரு தொழிற்சாலையின் மேற்கூரை நொறுங்கியது. இதில் சுமார் 500 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் மீது விழ இருந்த பெரிய எரிகல்லை அந் நாட்டின் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள் தாக்கியதில் அது சிதறி விழுந்தாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால்தான் எரி நட்சத்திரத்தின் துகள்கள் நிலப்பரப்பில் எங்கும் விழவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்