முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களின் எழுச்சியால் பகல் கனவில் உலா வரும் தி.மு.க.

வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம்,ஏப்.22 - தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைக்கான பொதுத் தேர்தலில் வாக்குப் பதிவு சதவீதம் எதிர்பாரா அளவு உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. அரசால் பல இன்னல்களை அனுபவித்த மக்கள் வெகுண்டெழுந்ததன் விளைவே இந்த ஓட்டு பதிவு சதவீத அதிகரிப்புக்கு காரணம் என்றே தோன்றுகிறது. ஆனால் மாறாக, தி.மு.க. தரப்பில் தங்கள் ஆட்சிக் காலத்தின் போது வழங்கிய இலவச பொருட்களால்தான் மக்கள் அதிக எண்ணிக்கையில் ஓட்டு அளித்துள்ளதாக கனவில் உலா வருகின்றனர். 

கடந்த 13 ம் தேதி நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் சென்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் கூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக சில வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நேரம் கூடுதலாக்கப்பட்டது. அது மட்டுமல்லாது, இதுநாள் வரை வாக்களிக்காதவர்களும், புதிய வாக்காளர்களும் ஆர்வமுடன் வாக்களிக்க சென்றதால் தமிழகத்தின் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஒரு புதிய எழுச்சியை மக்களிடம் காண முடிந்தது. கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் பட்ட துயரங்களுக்கு தீர்வு காண்பதற்காக மக்கள் எழுச்சி அடைந்துள்ளனர் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் கருத்து தெரிவித்திருந்தார். மக்களின் இந்த உத்வேக எழுச்சியே ஓட்டுப் பதிவு சதவீத அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. 

இதுவரை தமிழக தேர்தல்களில் மக்கள் மிகுந்த தெளிவான முடிவுகளையே எடுத்து வந்துள்ளனர். அதிகளவு ஓட்டுப் பதிவு சதவீதத்தினால் கடந்த 1967 ல் தி.மு.க. ஆட்சியை பிடித்தது. காரணம், அன்றைய நிலையில் காங்கிரசின் ஆட்சிக்கு எதிராக மக்கள் வீறுகொண்டு எழுந்ததே காரணம். அதே நேரம் கழுத்தில் குண்டடிபட்டு கட்டுடன் எம்.ஜி.ஆர். அமர்ந்திருப்பது போன்ற போஸ்டர்களும் ஒரு காரணமாகும். அதைத் தொடர்ந்து 1977 ல் தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது கருணாநிதியின் ஆட்சிக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்ததின் பலனாக அ.தி.மு.க.வை தோற்றுவித்த எம்.ஜி.ஆரை மக்கள் வெற்றியடைய செய்தனர். இதையடுத்து வந்த தேர்தல்களிலும் எம்.ஜி.ஆருக்கு வெற்றிக் கனியை தொடர்ந்து வாரிக் கொடுத்தனர் தமிழக மக்கள். 

இதையடுத்து 1991 தேர்தலின் போது கருணாநிதியின் ஆட்சிக்கு எதிராக வீசிய அலையில் அ.தி.மு.க 163 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இந்த காலக்கட்டங்களில் பல சிறப்பான திட்டங்களை கொண்டு வந்த ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்தது. அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பற்றி பல்வேறு அவதூறு செய்திகளை பரப்பிய தி.மு.க.வினரை நம்பி 1996 ல் தமிழக மக்கள் வாக்களித்து அக்கட்சியை வெற்றி பெற செய்தனர். அதோடு மட்டுமல்லாது, திருமங்கலம், பர்கூர், தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம், இளையான்குடி மற்றும் கம்பம் ஆகிய தொகுதிகளின் இடைத் தேர்தல்களில் தமிழக மக்களிடம் பணப்பட்டுவாடா நடத்தி தி.மு.க. எளிதாக வென்றது. 

அதையடுத்து வந்த அ.தி.மு.க ஆட்சியில் அனைத்து வகையிலும் நிம்மதியாக மக்கள் இருந்தனர். ஆனால் 2006 - 11 தி.மு.க. ஆட்சியில் ஒட்டு மொத்த தமிழகமே பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறது. குறிப்பாக, மின்வெட்டால் பல தொழில்கள் நசிவடைந்ததும், தொழிலாளர்கள் வேலையிழந்ததும், தேர்வு நேரத்தில் மாணவ, மாணவியர்கள் படிக்க முடியாமல் அவதிக்குள்ளானதும், அனைத்து பொருட்களின் விலை உயர்வால் வருவாய்க்குள் குடும்பம் நடத்த முடியாமல் பெண்கள் தவிப்புக்குள்ளானதும், கொலை, கொள்ளையால் மக்கள் அச்சத்தில் பாதிக்கப்பட்டுள்ளதும் என பல்வேறு துயரங்களை அனுபவித்து வந்தனர் மக்கள். 

இந்த நிலையில் கடந்த 13 ம் தேதி தமிழக சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதும் வாக்குப் பதிவில் அதிக ஓட்டு சதவீதமும் தங்களுக்கே சாதகமாக இருக்கும் என்று தி.மு.க.வினர் பகல் கனவு கண்டு வருகின்றனர். தமிழக தேர்தல் வரலாற்றில் தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி, அடுத்து வரும் தேர்தலில் தோல்வியை தழுவியே சென்றுள்ளனர். 1991 ல் அ.தி.மு.க.வும், 1996 ல் தி.மு.க.வும், 2001 ல் அ.தி.மு.க.வும், 2006 ல் தி.மு.க.வும் ஆட்சியை பிடித்துள்ளன. அந்த முறையில் தற்போது 2011 ல் அ.தி.மு.க ஆட்சி என்பது உறுதியான ஒன்றாகி விட்டது. 

மேலும் தங்களது தேர்தல் அறிக்கையை கதாநாயகி என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருந்தாலும், நடந்து முடிந்த தேர்தலில் கதாநாயகனாக விளங்கியது என்னவோ தேர்தல் கமிஷன்தான். தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கைகளால் தி.மு.க.வினரின் தில்லுமுல்லு வேலைகள் தவிடுபொடியாகிப் போனது. மேலும் தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் மக்களிடம் எழுந்த இந்த மவுனப் புரட்சி ஆகியவையே வாக்கு பதிவு சதவீத உயர்வுக்கு காரணமாக அமைந்ததால் இந்த தேர்தல் முடிவு தி.மு.கவுக்கு சாதகமாக இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.மக்களின் எழுச்சியால் பகல் கனவில் உலா வரும் தி.மு.க.

திருப்பரங்குன்றம்,ஏப்.22 - தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைக்கான பொதுத் தேர்தலில் வாக்குப் பதிவு சதவீதம் எதிர்பாரா அளவு உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. அரசால் பல இன்னல்களை அனுபவித்த மக்கள் வெகுண்டெழுந்ததன் விளைவே இந்த ஓட்டு பதிவு சதவீத அதிகரிப்புக்கு காரணம் என்றே தோன்றுகிறது. ஆனால் மாறாக, தி.மு.க. தரப்பில் தங்கள் ஆட்சிக் காலத்தின் போது வழங்கிய இலவச பொருட்களால்தான் மக்கள் அதிக எண்ணிக்கையில் ஓட்டு அளித்துள்ளதாக கனவில் உலா வருகின்றனர். 

கடந்த 13 ம் தேதி நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் சென்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் கூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக சில வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நேரம் கூடுதலாக்கப்பட்டது. அது மட்டுமல்லாது, இதுநாள் வரை வாக்களிக்காதவர்களும், புதிய வாக்காளர்களும் ஆர்வமுடன் வாக்களிக்க சென்றதால் தமிழகத்தின் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஒரு புதிய எழுச்சியை மக்களிடம் காண முடிந்தது. கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் பட்ட துயரங்களுக்கு தீர்வு காண்பதற்காக மக்கள் எழுச்சி அடைந்துள்ளனர் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் கருத்து தெரிவித்திருந்தார். மக்களின் இந்த உத்வேக எழுச்சியே ஓட்டுப் பதிவு சதவீத அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. 

இதுவரை தமிழக தேர்தல்களில் மக்கள் மிகுந்த தெளிவான முடிவுகளையே எடுத்து வந்துள்ளனர். அதிகளவு ஓட்டுப் பதிவு சதவீதத்தினால் கடந்த 1967 ல் தி.மு.க. ஆட்சியை பிடித்தது. காரணம், அன்றைய நிலையில் காங்கிரசின் ஆட்சிக்கு எதிராக மக்கள் வீறுகொண்டு எழுந்ததே காரணம். அதே நேரம் கழுத்தில் குண்டடிபட்டு கட்டுடன் எம்.ஜி.ஆர். அமர்ந்திருப்பது போன்ற போஸ்டர்களும் ஒரு காரணமாகும். அதைத் தொடர்ந்து 1977 ல் தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது கருணாநிதியின் ஆட்சிக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்ததின் பலனாக அ.தி.மு.க.வை தோற்றுவித்த எம்.ஜி.ஆரை மக்கள் வெற்றியடைய செய்தனர். இதையடுத்து வந்த தேர்தல்களிலும் எம்.ஜி.ஆருக்கு வெற்றிக் கனியை தொடர்ந்து வாரிக் கொடுத்தனர் தமிழக மக்கள். 

இதையடுத்து 1991 தேர்தலின் போது கருணாநிதியின் ஆட்சிக்கு எதிராக வீசிய அலையில் அ.தி.மு.க 163 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இந்த காலக்கட்டங்களில் பல சிறப்பான திட்டங்களை கொண்டு வந்த ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்தது. அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பற்றி பல்வேறு அவதூறு செய்திகளை பரப்பிய தி.மு.க.வினரை நம்பி 1996 ல் தமிழக மக்கள் வாக்களித்து அக்கட்சியை வெற்றி பெற செய்தனர். அதோடு மட்டுமல்லாது, திருமங்கலம், பர்கூர், தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம், இளையான்குடி மற்றும் கம்பம் ஆகிய தொகுதிகளின் இடைத் தேர்தல்களில் தமிழக மக்களிடம் பணப்பட்டுவாடா நடத்தி தி.மு.க. எளிதாக வென்றது. 

அதையடுத்து வந்த அ.தி.மு.க ஆட்சியில் அனைத்து வகையிலும் நிம்மதியாக மக்கள் இருந்தனர். ஆனால் 2006 - 11 தி.மு.க. ஆட்சியில் ஒட்டு மொத்த தமிழகமே பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறது. குறிப்பாக, மின்வெட்டால் பல தொழில்கள் நசிவடைந்ததும், தொழிலாளர்கள் வேலையிழந்ததும், தேர்வு நேரத்தில் மாணவ, மாணவியர்கள் படிக்க முடியாமல் அவதிக்குள்ளானதும், அனைத்து பொருட்களின் விலை உயர்வால் வருவாய்க்குள் குடும்பம் நடத்த முடியாமல் பெண்கள் தவிப்புக்குள்ளானதும், கொலை, கொள்ளையால் மக்கள் அச்சத்தில் பாதிக்கப்பட்டுள்ளதும் என பல்வேறு துயரங்களை அனுபவித்து வந்தனர் மக்கள். 

இந்த நிலையில் கடந்த 13 ம் தேதி தமிழக சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதும் வாக்குப் பதிவில் அதிக ஓட்டு சதவீதமும் தங்களுக்கே சாதகமாக இருக்கும் என்று தி.மு.க.வினர் பகல் கனவு கண்டு வருகின்றனர். தமிழக தேர்தல் வரலாற்றில் தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி, அடுத்து வரும் தேர்தலில் தோல்வியை தழுவியே சென்றுள்ளனர். 1991 ல் அ.தி.மு.க.வும், 1996 ல் தி.மு.க.வும், 2001 ல் அ.தி.மு.க.வும், 2006 ல் தி.மு.க.வும் ஆட்சியை பிடித்துள்ளன. அந்த முறையில் தற்போது 2011 ல் அ.தி.மு.க ஆட்சி என்பது உறுதியான ஒன்றாகி விட்டது. 

மேலும் தங்களது தேர்தல் அறிக்கையை கதாநாயகி என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருந்தாலும், நடந்து முடிந்த தேர்தலில் கதாநாயகனாக விளங்கியது என்னவோ தேர்தல் கமிஷன்தான். தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கைகளால் தி.மு.க.வினரின் தில்லுமுல்லு வேலைகள் தவிடுபொடியாகிப் போனது. மேலும் தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் மக்களிடம் எழுந்த இந்த மவுனப் புரட்சி ஆகியவையே வாக்கு பதிவு சதவீத உயர்வுக்கு காரணமாக அமைந்ததால் இந்த தேர்தல் முடிவு தி.மு.கவுக்கு சாதகமாக இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago