முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சினிமா பற்றி காஜல் கருத்து: பாரதிராஜா ஆவேசம்

ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.18 -​பாரதிராஜா தன்னைப் பற்றி ஆவேசமாக கூறியதால் நடிகை காஜல்அகர்வால் அதிர்ச்சி அடைந்தார். டைரக்டர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமானவர் நடிகை காஜல்அகர்வால். தொடர்ந்து நான் மகான் அல்ல, துப்பாக்கி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.

சமீபத்தில் காஜல் அகர்வால் அளித்த பேட்டியில், தமிழ் சினிமாவில் பெண்களுக்கு மரியாதை இல்லை. கதாநாயகர்களைத்தான் கடவுளாக நினைக்கிறார்கள். ஆனால் தெலுங்கில் பெண்களுக்கு நல்ல மரியாதை இருக்கிறது என்றார்.

அவரது கருத்து தமிழ் சினிமா உலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து நான் அப்படி சொல்லவில்லை என்று காஜல்அகர்வால் மறுத்தார்.

இதற்கிடையே டைரக்டர் பாரதிராஜா, காஜல் அகர்வாலுக்கு கண்டனம் தெரிவித்தார். காஜல் அகர்வால் திமிர் பிடித்தவர், அவரை அறிமுகப்படுத்தியதற்காக வருத்தமும் வேதனையும் படுகிறேன் என்றார்.

தனது பேச்சு குறித்து மற்றவர்கள் கண்டனம் தெரிவித்தபோது அதை காஜல்அகர்வால் கண்டு கொள்ளவில்லை. ஆனால் பாரதிராஜா கடுமையாக திட்டியதால் அவர் அதிர்ச்சி அடைந்தார். தான் அப்படி பேசவில்லை, பேட்டியை திரித்து வெளியிட்டுவிட்டார்கள் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டார்.

மேலும் பாரதிராஜாவிடம் பேசி விளக்கம் அளிக்க முயன்றார். ஆனால் பாரதிராஜா பேச மறுத்துவிட்டார். இதனால் காஜல் அகர்வால் மேலும் வருத்தம் அடைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony