முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெடித்து சிதறிய ரஷ்ய எரிநட்சத்திரம் அதிக சக்தி வாய்ந்ததாம்

ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

ஹூஸ்டன், பிப். 18 - ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா போட்ட அணுகுண்டு வெடித்த போது ஏற்பட்ட சக்தியை விட அதிக சக்தி வாய்ந்தது என்றும்,  ரஷ்ய வான் பகுதியில் எரிநட்சத்திரம் வெடித்துச் சிதறிய போது வெளியான சக்தி என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவின் யுரால் மலைத் தொடர் பகுதியில், வான்வெளியில் எரி நட்சத்திரம் ஒன்று 2 நாட்களுக்கு முன்பு விழுந்தது. இதன் அதிர்வலைகளால் வீட்டு கண்ணாடிகள் உடைந்தும் மேற்கூரைகள் விழுந்தும் 1100 பேர் படுகாயமடைந்தனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1,500 கிலோ மீட்டர் தொலைவில் யுரால் பகுதியில் உள்ள ஒன்று செல்யபின்ஸ்க் என்ற இடத்தில் இந்த பெரிய எரிநட்சத்திரம் விழுந்து வெடித்துச் சிதறியது. அப்போது நிலநடுக்கத்தைப் போல மிகப் பெரிய அதிர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன.

வானிலிருந்து பயங்கர வேகத்தில் தரையை நோக்கி பாய்ந்து வந்த இந்த நட்சத்திரம் தரையை நெருங்கும்போதே அதாவது பூமியிலிருந்து 50 கிலோமீட்டர் உயரத்தில் வெடித்துச் சிதறியது. அப்போது மிக பயங்கரமான வெடிச் சத்தம் எழுந்தது. அதைத் தொடர்ந்து பெரிய அளவில் தீப் பிழம்பு எழுந்ததோடு கடும் அதிர்வும் உண்டானது. இந்த வெடிப்பின்போது பல வீடுகளின் கூரைகள் நொறுங்கி விழுந்தன, ஏராளமான வீடுகளின் ஜன்னல்கள் வெடித்துச் சிதறின. தொலைத் தொடர்பு சேவைகளும் அறுந்துவிட்டன. இந்த அதிர்வால் ஒரு தொழிற்சாலையின் மேற்கூரையே நொறுங்கி விழுந்துவிட்டது. இந்த நிலையில் இந்த எரிநட்சத்திர வெடிப்பு குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதாவது அமெரிக்க ராணுவம், 2 ம் உலகப் போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அணுகுண்டை வீசி அவற்றை நிர்மூலமாக்கியது. அதில் ஹிரோஷிமா நகர் மீது போடப்பட்ட அணுகுண்டு வெடித்த போது வெளியான சக்தியை விட அதிகஅளவிலான சக்தி, இந்த எரிநட்சத்திரம் வெடித்துச் சிதறிய போது வெளியானதாக நாசா அமைப்பு கூறியுள்ளது.

அதாவது ஹிரோஷிமா நகரில் போட்ட அணுகுண்டு வெடித்த போது வெளியான சக்தியை விட 30 மடங்கு அதிக சக்தி இதில் வெளியானதாம். ஹிரோஷிமா நகரில் 1945 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா, அணுகுண்டு வீசியது. அது டி.என்.டி. ரக அணுகுண்டாகும். அதிர்ஷ்டவசமாக இந்த எரிநட்சத்திரம் அப்படியே கீழே விழவில்லை. விழுந்திருந்தால் மிகப் பெரிய உயிரிழப்புகள் நேர்ந்திருக்கும். இந்த எரிநட்சத்திரத்தின் எடை 10,000 டன் என்று கூறப்படுகிறது. 

ஆனால் தரையில் விழுவதற்கு முன்பே இது வெடித்துச் சிதறி விட்டதால் பேராபத்து நீங்கியது. இருப்பினும் பூமியின் பரப்பளவில் கிட்டத்தட்ட 32 மைல் பரப்பளவுக்கு இது வெடித்துச் சிதறியுள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகளை இது பதம் பார்த்துள்ளது. ஒரு மிகப் பெரிய அழிவிலிருந்து ரஷ்யாவின் அப்பிரதேசம் தப்பியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்