முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருது பெற்றுள்ள என்.எல்.சி. நிறுவனத்திற்கு வைகோ பாராட்டு

வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.22 - நவரத்னா விருது பெற்றுள்ள என்.எல்.சி. நிறுவனத்திற்கு வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் சிறப்பான வளர்ச்சி பெற்று விளங்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்து வருகின்றது. நாட்டின் உயிர்நாடியான மின்உற்பத்தித் துறையில் என்.எல்.சி. நிறுவனம் தொடர்ந்து சாதனையை படைத்து வருகின்றது.

கடந்த நிதி ஆண்டில் 1,788 கோடி யூனிட் மின்சார உற்பத்தி செய்து சிறப்பான இடத்தைப் பெற்றதுடன் ரூ. 1,247 கோடி இலாபம் ஈட்டி என்.எல்.சி.நிறுவனம் சாதனை புரிந்து உள்ளது. எனவே, என்.எல்.சி. நிறுவனத்தின் வெற்றி மகுடத்தில் நவரத்னா என்னும் இரத்தினக்கல் இந்திய அரசால் பொறிக்கப்பட்டு இருக்கின்றது. பொதுத்துறை நிறுவனங்களின் மதிப்புமிக்க உயரிய நவரத்னா விருதைப் பெற்று இருக்கின்ற என்.எல்.சி. நிறுவனத்தின் அதிபர், இயக்குனர்கள் மற்றும் என்.எல்.சி. வளர்ச்சிக்காக உழைத்து வரும் தொழிலாளர்கள், பொறியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவருக்கும் ம.தி.மு.க. சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்.எல்.சி. மென்மேலும் வளர்ந்து மகாரத்னா விருதையும் பெற்றிட வாழ்த்துவதுடன், என்.எல்.சி. பொதுத்துறை நிறுவனமாக ஒளிவீசித் திகழ்ந்திட ம.தி.மு.க. உறுதுணையாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்