முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., அதிபர் ஜர்தாரிக்கு எதிரான மனு தள்ளுபடி

புதன்கிழமை, 27 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,பிப்.28 - பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி அதிபராக செயல்படுவதை தடை செய்யகோரும் மனுவை அந்த நாட்டு நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.

பாகிஸ்தான் நாட்டு சுப்ரீம்கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பின்படி பாகிஸ்தான் அதிபராக ஜர்தாரி செயல்பட முடியாது. அதனால் அவர், அதிபராக செயல்படுவதை தடை செய்ய வேண்டும் என்று கோரி லாகூர் கோர்ட்டில் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைவர் பரீத் பிரசா என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்த நீதிபதி நசீர் சய்யீது ஷேக், இது தொடர்பாக ஏற்கனவே ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீது இன்னும் விசாரித்து தீர்ப்பு வழங்கப்படவில்லை. அதனால் இதுதொடர்பாக மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்ய தேவையில்லை. அதனால் மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்றார். அதிபர் ஜர்தாரிக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ள போதிலும் ஜர்தாரி இன்னும் அரசியலில் ஈடுபடுகிறார். அதிபராகவும் செயல்படுகிறார். ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவராகவும் இருக்கிறார் என்று பரீத், தனது மனுவில் கூறியிருந்தார். கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் லாகூர் ஐகோர்ட்டின் முழு பெஞ்சானது, கட்சி தலைவர் பதவியில் இருந்து ஜர்தாரி ஒதுங்கி இருக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்திருந்தது. ஆனால் அந்த தீர்ப்பை ஜர்தாரி மதிக்காமல் இன்னும் ஆளும் கட்சி தலைவராக செயல்பட்டுக்கொண்டியிருக்கிறார் என்றும் அந்த மனுவில் பரீத் மேலும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்