முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் பாக்கியராஜ் - சந்தானம் சமரச தீர்வு காண உத்தரவு

புதன்கிழமை, 27 பெப்ரவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, பிப்.28 - `கண்ணா லட்டு தின்ன ஆசையா' கதை தொடர்பான பிரச்சினையில் நடிகர் பாக்கியராஜ், சந்தானம் ஆகியோர் சமரச தீர்வு காண வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நடிகர்கள் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன், நடிகை விசாகா ஆகியோர் நடித்து வெளியான படம் `கண்ணா லட்டு தின்ன ஆசையா'. இந்த படத்தின் கதை கரு, இன்று போய் நாளை வா.. படத்தின் கதையாகும் என்றும், என்னுடைய அனுமதி இல்லாமல் கதை கருவை எடுத்துள்ளனர். அதனால் சந்தானம், ராமநாராயணன், புஷ்பா கந்தசாமி ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் பாக்கியராஜ் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தார். 

இந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று பாக்கியராஜ் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. புகாரின் அடிப்படையில் சந்தானம் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டது. 

நீதிபதி கிருபாகரன் தலைமையில் இந்த வழக்கு விசாரணைக்கு நேற்று வந்தது. நீதிபதி, இருதரப்பினரையும் சமரச தீர்வு மையத்தை அணுகி பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றார். விசாரணையை மார்ச் மாதம் 6-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!