முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேனல்-4 ஆதாரங்கள் வெளியே வந்தால் இலங்கை தாங்காது

வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், மார்ச். 1 - இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களில் சேனல் 4 வெளியிட்டது வெறு உதாரணம் தான். மொத்தமும் வெளிவந்தால் இலங்கை தாங்காது என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் தொடர்பில் இருந்த கண்ணன் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் நடந்த இனப் படுகொலை குறித்து சேனல் 4 நோ பயர் ஜோன் என்ற ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு வீடியோக்கள் கொடுத்து உதவியவர் இலங்கையைச் சேர்ந்த கண்ணன். இறுதிக் கட்டப் போரின் போது விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் தொடர்பில் இருந்தவர்களில் கண்ணனும் ஒருவர். இது குறித்து அவர் கூறுகையில், 

குறைந்த பரப்பளவு கொண்ட முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான தமிழர்கள் அடைபட்டிருந்தனர். ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் உணவு. பாதி பேர் அந்த ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் கடல் நீரைக் குடித்து குடித்தே இறந்தார்கள். தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்திடம் சரணடைய வந்தனர். அப்போது ராணுவத்தினர், நாங்கள் உங்களை சுட மாட்டோம். ஆனால் நீங்கள் அனைவரும் நிர்வாணமாக வந்து சரணடைய வேண்டும் என்றனர். 

வேறு வழி இன்றி தந்தை முன்பு மகளும், மகனின் முன்பு தாயும், அண்ணன் முன்பு தங்கையும் நிர்வாணமாக வந்து சரணடைந்தனர். வவுனியாவில் உள்ள மெனிக் பார்ம் முகாம் மற்றும் வெலிகந்தையில் உள்ள மறைமுக முகாம் ஆகியவற்றில் தினமும் இரவு நேரத்தில் பெண்கள் கதறும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். இலங்கையில் இதுவரை 1.47 லட்சம் பேர் கொல்லப்பட்டிருப்பார்கள். 

போர் நேரத்தில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை இலங்கை ராணுவம் பயன்படுத்தியது. கொத்தணி குண்டு 500 சிறிய குண்டுகளாகப் பிரிந்து பாய்ந்து தாக்கும் . ஒயிட் பாஸ்பரஸ் கொத்தணி குண்டுகளை விட கொடூரம் ஆனது. ஒரே ஷாட்டில் 100 க்கும் மேற்பட்ட குண்டுகளை உமிழும். அந்த குண்டுகள் ஆக்சிஜனை உறிஞ்சிய பிறகு தான் வெடிக்கும். அதனால் அந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டபோது குண்டு பாதிப்பு போக பலர் மூச்சு திணறி இறந்தனர். சேனல் 4 வெளியிட்டுள்ள ஆதாரங்கள் அனைத்தும் வெறும் உதாரணங்கள் தான். மொத்தமும் வெளியே வந்தால் இலங்கை தாங்காது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago