முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூறாவளி காற்று: ராமேஸ்வரத்தில் விசைப்படகுகள் சேதம் ரூபாய் 1 கோடி நஷ்டம்

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

ராமேஸ்வரம் ஏப்.- 23 - ராமேஸ்வரத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் சூறாவளி காற்றால் 70 விசைப்படகுகள் சேதமடைந்து கரை ஒதுங்கியது. இதனால் ரூபாய் 1 கோடி மீனவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.  கடல், மீன்வளம் பாதுகாக்க வேண்டி ஏப்ரல் 15 முதல் மே 30ம் தேதி வரை விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் ராமேஸவரம்,பாம்பன், மண்டபம் பகுதியில் உள்ள சுமார் 2000 விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஏற்பட்ட ராமேஸ்வரத்தில் திடீர் சூறாவளி காற்று வீசியது. அப்போது கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து விசைப்படகுகளில் 70 படகுகள் சேதமடைந்து கரை ஒதுங்கியது. இதனை மீனவர்கள் மீட்டு கரை மேல் ஏற்றி வைத்தனர். சேதடமடைந்த படகுகளின் பழுதை நீக்க ரூபாய் 1 கோடி செலவாகும் என மீனவர்கள் தெரிவித்தனர். சேதமடைந்த படகுகளை ராமநாதபுரம் சப்-

கலெக்டர் முத்துக்குமரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த சூறாவளி காற்றினால் ராமேஸ்வரத்தில் மின் கம்பங்கள் சாய்ந்து நேற்று முன்தினம் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரம் நகராட்சி முழுவதும் இருளில் மூழ்கியது. குடிசை வீடுகள் மீது தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்துன். சவுக்கு மரங்கள் ஒடிந்து விழுந்தன. சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்