முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட நடிகர் விக்ரம் திட்டம்

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்.- 23 - நடிகர் விக்ரம் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளார். நடிகர் விக்ரம் ஐநா அபிடேட்டில் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- என்னை ஐநா அபிடேட்டில் புதிய தூதராக நியமித்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு ரசிகர்களும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும்தான் காரணம். அந்த தூதரில் 4 பேர் நியமித்துள்ளனர். அதில் எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 

தற்போது இயற்கை வளங்களை காப்பாற்றும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவதென்று முடிவு செய்திருக்கிறோம். இதற்கு முதல் கட்டமாக சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நூறு மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம். மரத்தை நடுவதோடு இல்லாமல் பராமரிக்கும் பொறுப்பையும் சிலரிடம் கொடுத்திருக்கிறோம். 

தமிழ்நாடு முழுவதும் எனது ரசிகர் மன்றம் சார்பாக மரகன்றுகள் நடவதற்கும், அதனை பராமரிப்பதற்கும் ஏற்பாடு செய்துள்ளேன். இதுபோன்ற சமுதாய கண்ணோட்டத்துடன் செயல்படவும், அதற்கு உதவுவதற்கும் மற்ற நடிகர், நடிகைகளின் உதவிகளையும் கேட்பேன்.

மேலும் என்னை தூதராக நியமித்ததுடன் சில பொறுப்புகள் இருக்கிறது. அதற்காக மத்திய, மாநில அரசுகளின் உதவிகளையும் கேட்பேன். 

ஏற்கனவே எனது சொந்த அறக்கட்டளை மூலம் பல நற்பணிகள் செய்து வருகிறேன். கண் அறுவைசிகிச்சை, மருத்துவஉதவிகள், கல்வி உதவிகள் போன்றவற்றை செய்து வருகிறேன். அதோடு இந்த பணியையும் செய்வேன்.  தற்போது சாலை பெருக்கத்திற்காக மரங்களை வெட்டி விடுகிறார்கள். அதனை பார்க்கும் போது கோபம்தான் வருகிறது. ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால் மரம் வளர்ப்போம். இயற்கை வளம் பெறுவோம். 

நான் சமுதாய பணியில் ஈடுபடுவதால் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் என்றெல்லாம் சொல்லமுடியாது. எனக்கு என்ன நடக்கும் என்பதை என்னால் சரியாக கணிக்கமுடியாது. 

இவ்வாறு நடிகர் விகரம் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த பேட்டியின்போது சூரியநாராயணன், எம்.பி.நிர்மலா, பி.ஆர்.ஓ.நிகில் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago