முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனா நிலநடுக்கம்: 30 பேர் காயம் - 3,200 வீடுகள் சேதம்

திங்கட்கிழமை, 4 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், மார்ச்.5 - சீனாவின் யுனான் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவானது. இந்நிலநடுக்கத்தால் 3,200 ​- க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 30 - க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜிஸான் நகர் பகுதியில்  9 ஆடி ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம்  கொண்டிருந்தது.  குறிப்பாக  மியான்மரின் எல்லையில்  உள்ள சீனப் பகுதியான எரியுவான் மாவட்டத்தில் கடும் சேதம் ஏற்பட்டது.  இங்குள்ள  3,200 வீடுகள் சேதமடைந்தன. இதில் 700​வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்தன.  இப்பகுதியை  சேர்ந்த 55 ஆயிரம்  பேர் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். இந்த நிலநடுக்கத்துக்குப் பின், தொடர்ந்து 34 முறை பின்னதிர்வுகள் ஏற்பட்டன. யுனான்  மாகாண அரசு அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக 6 ஆயிரம் கூடாரங்கள் அமைப்பதற்கும், உணவு, உடைகளை வழங்கவும்  நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்