முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலத்தீவு முன்னாள் அதிபர் கைது

செவ்வாய்க்கிழமை, 5 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச். 6 - மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஸீத்தை அரசு கைது செய்துள்ளது. அவர் மாலேயில் உள்ள கோர்ட்டில் இன்று ஆஜர் செய்யப்படுகிறார். அப்துல்லா கஸி என்ற நீதிபதியை சட்டத்துக்குப் புறம்பாக கைது செய்ததை அடுத்து அவர்மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாலத்தீவிலுள்ள இந்திய தூதரகத்தில் சில நாள்களுக்கு முன்னர்  முகமது நஸீத் தஞ்சமடைந்தார்.  

   இதன் பின்னர் அவர் கைது செய்யப்படமாட்டார் என்று உறுதிமொழி அளித்த பின்னரே அவர் இந்திய தூதரகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார் என்று செய்திகள் தெரிவித்தன. மேலும் அவரை இந்திய தூதரகத்திலிருந்து வெளியேற்றுவகற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அவர் தேர்தலில் பிரச்சாரம் செய்வதை தடுக்கும் முயற்சி எதுவும் இல்லை என்றும், இதை திட்டவட்டமாக மறுப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி அதிபர் மாளிகை அதிகாரி அப்பாஸ் ரியாஸ் கூறியதாவது:

முகமது நஸீத்,  இந்திய தூதரகத்திலிருந்து தன்னிச்சையாக அவரது சொந்த விருப்பத்தின் பேரில் வெளியேறினார் என்றும், இதுதொடர்பாக எந்த உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை என்றும்  இதற்காக எந்த இந்தியருடனோ அல்லது வேறு எவருடனோ உடன்பாடு எதுவும் செய்துகொள்ளவில்லை என்றும்,  தனது அரசியல் பணிகளை மேற்கொள்ளும் விதத்தில் அவர் இந்திய தூதரகத்தை விட்டு வெளியேறினார் என்று கூறினார்.

45 வயதான முகமது நஸீத், கோர்ட்டில் ஆஜர் ஆஜர் ஆகாததால் அவருக்கு கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவர் இந்திய தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். மாலத்தீவில் செப்டம்பர் மாதம் 7-ம்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடத் தகுதி இல்லாதவர் என்று கூறி என்னை தகுதி நீக்கம் செய்து என்னை தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க எனக்கு எதிராக சதி நடக்கிறது என்று அவர் கூறினார். இதை அரசு மறுத்துள்ளது. 

2008-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவர் வெற்றிபெற்றார். ஆனால் அங்கு நடந்த கலவரத்தை அடுத்து அவர் பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்டார். இதன்பிறகு அவர் இந்திய தூதரகத்தில் தஞ்சம் புகுந்ததால் அவரை கைது செய்யமுடியவில்லை. அவர் மீதான வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்