முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வங்கதேச அணி 638 ரன்

திங்கட்கிழமை, 11 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

 

காலே, மார்ச். 12 - இலங்கை அணிக்கு எதிராக காலே நக ரில் நடந்து வரும் முதலாவது கிரிக்கெ ட் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 638 ரன்னைக் குவித்து ஆட்டம் இழந்தது. வங்கதேச அணி தரப்பில், கேப்டன் முஸ்பிகர் ரகீம் இரட்டை சதம் அடித்த து ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். தவிர, மொகமது அஸ்ரப்புல் மற்றும் நசீர் ஹொசைன் ஆகியோரும் சதம் அடித்தனர். இதனால் அந்த அணி பிர மாண்ட ஸ்கோரை எட்டியது. 

டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி தரப்பில், இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமை கேப்டன் முஸ்பிக ருக்கு கிடைத்து உள்ளது. தவிர, ஆல்ர வுண்டர் அஸ்ரப்புல் இரட்டை சத வாய்ப்பை(190) நழுவ விட்டார். 

மேலும் வங்கதேச அணிக்கு இது டெ ஸ்ட் போட்டியில் அதிகபட்ச ஸ்கோ ராகும். முதல் முறையாக 600 ரன்னைக் கடந்துள்ளது. 

இதற்கு முன்பு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் டாக்காவில் நடந்த மே.இ.தீவு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியி ல் அந்த அணி 556 ரன்னை எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இலங்கை அணிக்கும், வங்கதேச அணிக்கும் இடையேயான முதலாவது டெ ஸ்ட் போட்டி காலே சர்வதேச மைதா  னத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெ ற்று வருகிறது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 4 விக்கெட்இழ ப்பிற்கு 135 ஓவரில் 570 ரன்னை எடுத்து ஆட்டத்தை டெக்ளெர் செய்தது.

இலங்கை அணி தரப்பில், திரிமன்னே 155 ரன்னையும், சங்கக்கரா 142 ரன்னையும், சண்டிமால் 116 ரன்னையும் எடுத் தனர். தவிர, தில்ஷான் 52 ரன்னையும், கருணாரத்னே 41 ரன்னையும், மேத்யூஸ் 27 ரன்னையும் எடுத்தனர். 

பின்பு களம் இறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 196 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 638 ரன் னை எடுத்தது.  

வங்கதேச அணி தரப்பில் கேப்டன் முஸ்பிகர் ரகீம் இரட்டை சதம் அடித்த து ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். அவர் 321 பந்தில் 200 ரன்னை எடுத்தார். இதி ல் 22 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக் கம். 

ஆல்ரவுண்டர் மொகமது அஸ்ரப்புல் இரட்டை சத வாய்ப்பை நழுவவிட்

டார். அவர் 417 பந்தில் 190 ரன் எடுத் தார். இதில் 20 பவுண்டரி மற்றும் 1 சிக் சர் அடக்கம். 

நசீர் ஹொசைன் 151 பந்தில் 100 ரன் எடு த்தார். இதில் 9 பவுண்டரி அடக்கம். தவிர, மொமினுல் ஹக் 55 ரன்னை எடு த்தார். 

மேலும், வங்கதேச அணி பார்ட்னர்ஷி ப்பில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது. 5-வது விக்கெட்டிற்கு அஸ்ரப்புல் மற்றும் கேப்டன் ரகீம் இருவரும் இணைந்து 267 ரன் சேர்த்துள்ளனர். டெ ஸ்டில் இது அந்த அணிக்கு ஒரு புதிய பார்ட்னர்ஷிப் சாதனையாகும். காலே மைதானத்தில் இது ஒரு புதியசாதனையாகும். 

இலங்கை அணி சார்பில் குலசேகரா 94 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட்எடுத் தார். தவிர, எரங்கா, ஹெராத், மென் டிஸ் மற்றும் தில்ஷான் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். 

பின்பு களம் இறங்கிய இலங்கை அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2-வது இன்னிங்சில் 30 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்னை எடுத்து இருந் தது. தில்ஷான் 63 ரன்னுடனும், சங்கக் கரா 49 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 

இலங்கை அணி தற்போது 48 ரன் முன் னிலையில் உள்ளது. 9 விக்கெட் கைவ சம் உள்ளது. இன்று ஆட்டத்தின் கடை சி நாளாகும். எனவே இந்தப் போட்டி டிரா ஆக அதிக வாய்ப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்