முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய போப் ஆண்டவராக ஜார்ஜ் மரியோ தேர்வு

வியாழக்கிழமை, 14 மார்ச் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

வாடிகன், மார்ச். 15 - புதிய போப் ஆண்டவராக அர்ஜென்டினாவைச் சேர்ந்த 76 வயதாகும் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் போப் முதலாம் பிரான்சிஸ் என்று அழைக்கப்படுவார். போப் ஆண்டவர் 16 ம் பெனடிக்ட் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 28 ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுக்க கத்தோலிக்க மத கார்டினல்கள் வாடிகனில் கூடினர். முதல் 3 சுற்று வாக்குப் பதிவில் புதிய போப் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதனால் கடந்த இரண்டு நாட்களாக வாக்கெடுப்பு நடந்த சிஸ்டின் தேவாலய புகைபோக்கியில் கரும்புகை போடப்பட்டது. கரும்புகை என்றால் புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை என்று அர்த்தம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த 4 வது சுற்று வாக்குப்பதிவில் புதிய போப் ஆண்டவராக அர்ஜென்டினாவைச் சேர்ந்த 76 வயதாகும் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டார். அவர் இனிமேல் போப் முதலாம் பிரான்சிஸ் என்று அழைக்கப்படுவார். ஐரோப்பாவைச் சேராத ஒரு நபர் போப் ஆண்டவராக கிட்டத்தட்ட 1,300 ஆண்டுகள் கழித்து தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய போப் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து புகைபோக்கில் வெண்புகை வெளியேற்றப்பட்டது. போப் பிரான்சிஸ் அர்ஜென்டினா தலைநகரான பியூனஸ் ஏர்ஸ் தேவாலயத்தில் ஆர்ச் பிஷப்பாக இருந்தார். கடந்த 2001 ம் ஆண்டில் கார்டினல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்