முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசி.க்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து

வியாழக்கிழமை, 14 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

 

வெலிங்டன், மார்ச். 15 - நியூசிலாத்து அணிக்கு எதிராக வெலி ங்டன் நகரில் நேற்று துவங்கிய 2-வது  டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 267 ரன் எடுத்து உள்ளது. இங்கிலாந்து அணியின் இன்னிங்சில் துவக்க வீரர் காம்ப்டன் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டிராட் இருவரும் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்ச மாகும். 

இருவரும் இணைந்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்து உள்ளனர். அந்த அணி பிரமாண்ட ஸ்கோ ரை எட்ட நல்ல வாய்ப்பு உருவகியுள்ளது. இங்கிலாந்து அணி தற்போது வலுவான நிலையில் உள்ளது. 

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வெலிங்டன் நகரில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் நேற்று துவங்கியது. 

முன்னாதாக இந்தப் போட்டியில் டா சில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இங்கி. அணி சார்பில் கேப்டன் கூக் மற்றும் காம்ப்டன் இருவரும் ஆட்டத்தை துவ க்கினர். 

இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 90 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 267 ரன் னை எடுத்து இருந்தது. 

துவக்க வீரர் காம்ப்டன் 231 பந்தில் 100 ரன் எடுத்தார். இதில் 15 பவுண்டரி  அட க்கம். இறுதியில் அவர் மார்டின் வீசிய பந்தில் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

மிடில் ஆர்டர் வீரரான டிராட் 234 பந்தி ல் 121 ரன்னை எடுத்து ஆட்டம் இழக் காமல் இருக்கிறார். இதில் 15 பவுண்ட ரி அடக்கம். 

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீர ரான பீட்டர்சன் 48 பந்துகளைச் சந்தித்து 18 ரன்னை எடுத்து ஆட்டம் இழக்காம ல் இருக்கிறார். கேப்டன் கூக் 17 ரன்னி ல் ஆட்டம் இழந்தார். 

முன்னதாக கேப்டன் கூக் மற்றும் காம் ப்டன் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். இருவரும் கவனமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 26 ஆக இருந்த போது கேப்டன் கூக் வாக்னர் வீசிய பந்தில் புல்டானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் எடுத்த ஸ்கோர் 17. 

பின்பு டிராட் ,காம்ப்டனுடன் இணைந்தார். இந்த ஜோடி பொறுமையாகவு ம், கவனமாகவும் ஆடி அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தியது. 

அணியின் ஸ்கோர் 236 க்கு சென்ற போது, காம்ப்டன் சதம் அடித்த நிலை யில் அவுட்டானார். இருவரும் இணைந்து 2 -வது விக்கெட்டிற்கு 216 ரன் சேர்த் தது குறிப்பிடத்தக்கது. பின்பு பீட்டர்ச ன் டிராட்டுடன் இணைந்தார். 

நியூசிலாந்து அணியின் பந்து வீச்சு முத ல் நாள் ஆட்டத்தில் எடுபடவில்லை. அந்த அணி சார்பில், வாக்னர் மற்றும் மார்டின் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்