முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று ஈஸ்டர் திருநாள் - தலைவர்கள் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.24 - இயேசு பெருமான் உயிர்த்தெழுந்ததாக கூறப்படும் ஈஸ்டர் திருநாள் இன்று நாடு முழுவதும் கிறிஸ்தவ பெருமக்களால்  உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் விடுத்துள்ள வாழ்த்து செய்தி வருமாறு: 

 

முதல்வர் கருணாநிதி: 

 

இன்னல் நீங்கி இன்பம் கண்ட நன்னாளாகக் கிறித்துவ சமுதாய மக்கள் கொண்டாடும், ஈஸ்டர் திருநாள் ஞாயிற்றுக் கிழமையன்று மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது.

அன்பையும், அருளையும் போதித்த இயேசு பெருமான் பகைவர் தமக்கு இழைத்த கொடுமைகளையெல்லாம் சகித்துக்கொண்டு ஏழை எளிய மக்களுக்கு மிகுந்த இரக்கத்துடனும், கருணையுடனும் தொண்டுகள் புரிந்தார். தமது போதனைகளாலும், செயல்களாலும் சமுதாயத்தில் நலிந்த பிரிவு மக்களுக்கு உதவிடவேண்டும் என்னும் உணர்வை அனைவரிடமும் வளர்த்தார். உங்கள் மேல் உடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக் கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள்; உங்களிடம் கேட்கும் எவர்க்கும் கொடுங்கள்; உங்களுடைய பொருள்களை எடுத்துக் கொள்வோரிடம் இருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள்; திரும்பக் கிடைக்குமென எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள் எனப் போதித்தார். 

இயேசு பெருமான்  புகழ்பாடும் பெருநாள் இந்த ஈஸ்டர் திருநாள். இந்நன்னாளில் அவர் போதித்த வாழ்க்கை நெறிகளைக் கடைப்பிடித்து வாழும் கிறித்துவ சமுதாய மக்கள் அனைவர்க்கும் எனது உளம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். 

 

 

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ: 

 

இருளைக் கிழித்து ஒளி எழுதல் போல, ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று, சிலுவையில் அறையப்பட்டு, மனிதகுலத்தின் அவலத்தைப் போக்க, இரத்தம் சிந்திய கிறிது இயேசுநாதர், மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்த உன்னதத்தை, ஈடர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறிதவப் பெருமக்கள் கொண்டாடுகின்றனர்.

nullநீதியின் மேல் பசி, தாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தி அடைவார்கள் என்று, மலைப் பிரசங்கத்தில் மொழிந்த இயேசு பெருமான் சக மனிதர்களை நேசிப்பதைப் போல, உங்கள் சத்ருக்களையும் நேசியுங்கள் என்று, மனித நேயத்தை உலகுக்கு உணர்த்தினார்.

சிலுவையிலே ஆவியை nullநீத்த இயேசுநாதர், மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததையே, இன்று உலகம் கொண்டாடுகிறது. 

மரண பயங்கரத்துக்கு ஆளாகி, துயர இருளிலும், கண்ணீரிலும், துடிதுடித்து வாடும் ஈழத்தமிழ் மக்களுக்கும் நீnullதி கிடைக்கும்; விடியல் உதிக்கும். கொடியவன் ராஜபக்சே கூட்டம் அனைத்துலக நீnullதிமன்றத்தில் தண்டிக்கப்படும் எனும் நம்பிக்கையோடு, ஈழத்தமிழரின் துன்பத்தைப் போக்கவும், சுதந்திர தமிழ் ஈழ தேசத்தை மலர்விக்கவும், இந்த ஈஸ்டர் திருநாளில், தமிழ்க்குலம் உறுதி எடுக்கட்டும்.

அன்பையும் கருணையையும் போற்றும் கிறிதவப் பெருமக்களுக்கு, ம.தி.மு.க. சார்பில், ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக்

கொள்கிறேன்.

 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:

 

மனித குலத்தை வாழ்விக்க இறை தூதர் இயேசு நாதர் மீண்டும் உயிர்த்தெழுந்த நன்நாள் ஈஸ்டர் திருநாள் ஆகும். நாம் செய்கின்ற தொண்டும், தியாகமும் வீண் போகாது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.

பகைவர்களுக்கும் அருள் செய்வதும், பாமர்களுக்கும் அன்புகாட்டி உதவி செய்வதும் அவர் அளித்த போதனைகளில் சிறந்த ஒன்று, மக்களின் வாழ்க்கை மேம்பாடு அடைய தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் ஏசுபிரான் ஆவார்.

மதவெறியை மாய்த்து மனிதநேயம் தழைக்க ஈஸ்டர் திருநாள் ஒரு இன்ப திருநாளாக மலரட்டும் ஏழைகளுக்கு செய்யும் தொண்டு, இறைவனுக்கு செய்யும் தொண்டாகும். இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்பது தே.தி.மு.க. தாரக மந்திரமாகும். இந்நாளில் கிறிஸ்தவ சமுதாயத்தை சார்ந்த அனைத்து மக்களுக்கும் என் இதயமார்ந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

டாக்டர்.சேதுராமன்:

 

இயேசு உயிர்த்தெழுந்த நன்னாள் ஈடர் என்னும் பொன்னாள். இந்த நல்ல நாளில் நல்லவை நிகழவும், தொல்லைகள் தொலையவும் என அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர்.ந.சேதுராமன் தன் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஈஸ்டர் தினம் என்பது இயேசு பெருமான் உயிர்தெழுந்த நாளாகும். உலக ரட்சகன் என்றும் போற்றப்படும் இயேசு கிறிது தான் சிலுவையால் அறையப்பட்டு மரித்த போது ஒன்பதாம் நாளில் நான் உயர்த்தெழுந்திருப்பேன் என்று முழங்கினார். அதன்படி உண்மை, ஒழுக்கம், அன்பு, அமைதி உயிர்தெழுந்தது. இந்த இனிய நன்னாளில் தேசத்தில் தொல்லைகள் அகலவும், நல்லவை நிகழவும், அன்பும் சமாதானமும் அகிலத்தில் தழைக்கவும், ஒழுக்கம் உலகாளளவும் இந்த ஈடர் தின பொன்னாளில் என் வாழ்த்துக்களை வழங்குவதில் மகிழ்கிறேன்என டாக்டர்.ந.சேதுராமன் தன் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

இவ்வாறு தலைவர்கள் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்