முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலி தூதர் வெளியேறாமல் தடுக்க உத்தரவு

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2013      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச். 16 - இத்தாலி நாட்டுத் தூதர் டேனியல் மன்சினி இந்தியாவைவிட்டு வெளியேறாமல் தடுக்கும் நோக்கில் அனைத்து விமான நிலையங்களும் உஷார் நிலையில் இருக்குமாவு அறிவுறுத்தப்பட்டுள்ளன. அவர் தப்பி ஓடிவிடாதபடி கண்காணிக்குமாறு விமான நிலைய அதிகாரிகளுக்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  எங்களது உத்தரவைப் பெறாமல் இத்தாலி நாட்டுத் தூதர் இந்தியாவை விட்டு வெறியேறக் கூடாது என்று கூறி இத்தாலி நாட்டுத் தூதருக்கு சுப்ரீம் தடைவிதித்துள்ளது. மத்திய  உள்துறை அமைச்சகம் இந்த அதிரடி முடிவை மேற்கொண்டுள்ளது. 

இரு மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலியைச் சேர்ந்த கடற்படை அதிகாரிகள் இருவரை திருப்பி அனுப்ப இத்தாலி அரசு மறுத்ததற்கு சிறப்பு நீதிமன்றம் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

கேரளத்தில் கொல்லம் அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த இரு மீனவர்களை இத்தாலி கடற்படை அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொன்றனர். இதுதொடர்பாக அவர்கள் மீது வழக்குக் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

தங்கள் நாட்டில் நடைபெறும் தேர்தலில்  பங்கேற்று வாக்களிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று இவர்கள் இருவரும் கேட்டதை அடுத்து இவர்களுக்கு இத்தாலி தூதர் உத்தரவாதம் அளித்த பின்னர் இவர்கள் இருவரும் இத்தாலி சென்றனர். 

பிறகு இவர்கள் இருவரையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடியாது என்று இத்தாலி அரசு கூறியது.

ஒப்பந்தத்தை மீறுவது நீதிமன்றத்துக்கு எதிரான செயலாகும். இந்திய அரசு இதனால் மிகவும் கவலை அடைந்துள்ளது என்று சிறப்பு நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி தெரிவித்தார். இவரது கருக்தை கேட்ட நீதிமன்றம், இத்தாலி நாட்டு தூதருக்கும், இத்தாலி நாட்டு கடற்படை அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது.

 கேரளத்தில் கொல்லம் அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த இரு மீனவர்களை இத்தாலி கடற்படை அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொன்றனர்   

பின்னர் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். தேர்தலில் வாக்களிக்கச் சென்ற இவர்கள் இருவரும் ஒப்பந்தப்படி இந்தியாவுக்கு திரும்பி வரவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago