முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவிஸ் பேட்மிண்டன்: சாய்னா அரை இறுதிக்கு முன்னேற்றம்

சனிக்கிழமை, 16 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

 

பேசெல், மார்ச். 17 - சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியி ல் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான சாய்னா நெக்வால் அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறார். இதன் மூலம் நெக்வால் தொடர்ந்து 3 - வது முறையாக சுவிஸ் ஓபன் பட்டம் வெல்ல நல்ல வாய்ப்பு உருவாகி உள்ளது. 

சர்வதேச அளவில் முக்கிய போட்டிக ளில் ஒன்றான சுவிஸ் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டி முக்கிய நகரமான பேசெல் நகரில் கடந்த சில நாட்களாக வெகு விமர்சையாக நடந்து வருகிறது. 

இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்க னகைள் களத்தில் குதித்துள்ளனர். இந்த ப் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தில் உள்ளது. 

இதில் பங்கேற்று வரும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத் தி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். 

மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் கா லிறுதி ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நெக்வாலும், சீன தைபெய் வீராங்கனையும் மோதினர். 

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்ட த்தில் சாய்னா அபாரமாக ஆடி 21- 11, 21 -12 என்ற கேம் கணக்கில் தைபெய் வீராங்கனை ஜு யிங் தையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். 

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை நெக்வால் முதல் நிலை வீராங்கனையாவார். இதில் தோல்வி அடைந்த தைபெய் வீராங்க னை 6-ம் நிலை வீராங்கனையாவார். இந்தப் போட்டி சுமார் 29 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. 

அடுத்து நடக்க இருக்கும் அரை இறுதி யில சாய்னா சீன வீராங்கனை ஷிஜி யான் வாங்குடன் பலப்பரிட்சை நடத்த இருக்கிறார்.  

கடந்த ஆண்டு நடைபெற்ற சுவிஸ் ஓப ன் இறுதிச் சுற்றில் சாய்னா சீன வீராங்க னையை தோற்கடித்தது நினைவு கூறத் தக்கது. 

இதுவரை இந்திய வீராங்கனை சாய் னாவும், சீன வீராங்கனை வாங்கும் 5 முறை மோதியுள்ளனர். இதில் 4 முறை சாய்னா வெற்றி பெற்று இருக்கிறார். 

தவிர, இந்த மாதத்தின் துவக்கத்தில் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போ   ட்டியின் கால் இறுதியில் சாய்னா வா ங்கை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. 

சாய்னா தற்போது நல்ல பார்மில் உள்ளார். அவர் சிறப்பான ஆட்டத்தை வெ ளிப்படுத்தி எதிரணி வீராங்கனைகளை திணறவைத்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago