முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொகாலி டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஷிகார் தவான் சதம்

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

 

மொகாலி, மார்ச். 17 - இந்திய அணிக்கு எதிராக மொகாலியி ல் நடைபெற்று வரும் 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 408 ரன்னில் ஆட்டம் இழந்தது. பின்பு முதல் இன்னிங்சைத் துவக்கிய இந்திய அணி ஆஸி.க்கு பதிலடி கொடு த்து வருகிறது. துவக்க வீரர்கள் சிறப் பாக ஆடி வருகின்றனர். இந்த டெஸ்டில் அறிமுக வீரரான ஷிகார் தவான் சதம் அடித்தது ஆட்டத் தின் சிறப்பம்சமாகும். அவர் 200 ரன் னை நோக்கி முன்னேறி வருகிறார். முரளி விஜய் அரை சதம் அடித்து இருக் கிறார். 

ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்சில் 4 வீரர்கள் அரை சதம் அடித்தனர். துவக்க வீரர்கள் கோவன் மற்றும் வார்னர் இரு வரும் அரை சதம் அடித்தனர். டி. ஸ்மித் மற்றும் ஸ்டார்க் இருவரும் சதவாய்ப் பை கோட்டை விட்டனர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக ளுக்கு இடையேயான பார்டர் மற்றும் கவாஸ்கர் கோப்பைக்கான 3- வது டெ டஸ்ட் போட்டி மொகாலி நகரில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட்  அரங்கத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன் னிங்சில், 141.5 ஓவரில் அனைத்து விக் கெட்டையும் இழந்து 408 ரன்னை எடு த்தது. அந்த அணி சார்பில் 4 வீரர்கள் அரை சதம் அடித்தனர். இதில் 2 வீரர்கள் சத வாய்ப்பை நழுவவிட்டனர். 

ஆஸ்திரேலிய அணி தரப்பில் 9 -வது வீரராக இறங்கிய ஸ்டார்க் அதிகபட்சமாக, 144 பந்தில் 99 ரன்  எடுத்தார். இதில் 14 பவுண்டரி அடக்கம். இறுதியி ல் அவர் இஷாந்த் வீசிய பந்தில் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளி யேறினார். 

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான டி. ஸ்மித் 185 பந்தில் 92 ரன் எடுத்தார். இதி ல் 10 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக் கம். இறுதியில் அவர் ஓஜா வீசிய பந்தி ல் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத் து ஆட்டம் இழந்தார். 

துவக்க வீரர் எட்கோவன் 238 பந்தில் 86 ரன் எடுத்தார். இதில் 8 பவுண்டரி அடக் கம். வார்னர் 147 பந்தில் 71 ரன் எடுத் தார். இதில் 9 பவுண்டரி அடக்கம். தவிர, ஹாடின் 21 ரன் எடுத்தார். 

இந்திய அணி சார்பில் முன்னணி வேக ப் பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா 72 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத் தார். ஜடேஜா 77 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். தவிர, அஸ்வின் மற்றும் ஓஜா தலா 2 விக்கெட் எடுத்த னர்.

2- வது நாள் இன்னிங்சை ஆடத் துவங் கிய ஆஸி.அணி 3 -வது நாள் மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் பாக ஆட்டத்தை முடித்தது. 

பின்பு களம் இறங்கிய இந்திய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 58 ஓவரில் விக்கெட் இழ ப்பின்றி 283 ரன்னை எடுத்து இருந்தது. 

இந்திய அணியின் இன்னிங்சில் அறிமு க வீரரான தவான் சதம் அடித்து அமர்க் களப்படுத்தினார். அவர் 168 பந்தில் 185 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருக்கிறார். இதில் 33 பவு ண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். 

மற்றொரு துவக்க வீரரான முரளி விஜ ய் 181 பந்தில் 83 ரன்னை எடுத்து ஆட்ட ம் இழக்காமல் இருக்கிறார். இதில் 10 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். 

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 283 ரன்னைச் சேர்த்து அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து உள்ளனர். எனவே இந்திய அணி பிரமாண்ட ஸ்கோரை எட்ட வா  ய்ப்புள்ளது. 

ஷிகார் தவான் இரட்டை சதத்தநை நெ ருங்கி இருக்கிறார். விஜய் சதத்தை நெ ருங்கி இருக்கிறார். இந்திய அணி தற் போது 125 ரன் பின்தங்கி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago