முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய போப்பிற்கு தலாய்லாமா வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013      ஆன்மிகம்
Image Unavailable

தர்மசலா, மார்ச். 17  - கத்தோலிக்க திருச்சபையின் 266வது தலைவராக பதவி ஏற்ற புதிய போப் ஆண்டவர் பிரான்சிஸ்க்கு திபெத்திய மதத் தலைவரான தலாய்லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், கத்தோலிக்க துறவிகளை பற்றிய அறிமுகம் அவ்வளவாக இல்லாத போதும், நான் பிரான்சிஸின் ரசிகன். அவரது ஒழுக்கம், எளிமை, அவரது வாழ்க்கை முறை, அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தும் குணம் போன்றவற்றால் நான் பெரிதும் ்ஈர்க்கப்பட்டுள்ளேன். புதிய போப்பிற்காக தங்களது பெயரை முன்மொழிந்தது மிகப் பொருத்தமானது என்றும் அவர் கூறியுள்ளார். அமைத்திக்கான நோபல் பரிசு வென்ற தலாய் லாமா, புதிய போப்பை விரைவில் சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்