முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைகீழாக டி.வி படிக்கும் அதிசய பெண்

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

செர்பியா, மார்ச். 18 - சாதாரணமாக மனிதர்கள் நேராக பேப்பரை வைத்து படிப்பார்கள். நேராக அமர்ந்து டி.வி. பார்ப்பார்கள். ஆனால் பெண் ஒருவர் பார்வைத் திறனில் ஏற்பட்ட கோளாறினால் தலைகீழாக பேப்பரை வைத்தும் டி.வி. பார்த்தும் வருகிறார். சராசரி மனிதர்களின் விழித் திரைகளில் தெரியும் உருவம், தலைகீழாக தான் தோன்றும். அந்த உருவம், மூளைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் ஓர் தலைகீழ் மாற்றத்துடன் நேரிய உருவமாக நமது மனத்திரையில் பதிவாகிறது. 

ஆனால், செர்பியா நாட்டைச் சேர்ந்த போஜானா டேனிலோவிக் (28) என்ற பெண்ணின் மூளையில் பதிவாகும் உருவப்பதிவுகளை தலைகீழாக மாற்றும் செயல்பாட்டில் குறைபாடு உள்ளதால், செய்தித்தாள், டி.வி. கம்ப்யூட்டர் ஆகியவற்றை அவர் தலைகீழாக வைத்தே பார்க்க வேண்டியுள்ளது. பிறவியில் இருந்தே தனக்கு இந்த குறைபாடு உள்ளதாகவும், வீட்டில் குடும்பத்தினருக்கு ஒரு டி.வி.யும் தனக்கென்று தலைகீழாக பொருத்தப்பட்ட தனி டி.வி.யும் இருப்பதாக கூறுகிறார் அந்தப் பெண்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்