முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது டெஸ்ட்: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

திங்கட்கிழமை, 18 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

 

மொகாலி, மார்ச். 19 - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொகா லியில் நடைபெற்ற 3 -வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3 -0 என்ற கணக்கில் கைப்பற்றி தோனி அன்ட் கோ சாத னை படைத்துள்ளது. 

முதல் நாளன்று மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. 4 நாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணி வெளிநாட்டுத் தொடரி ல் 4 -0 என்ற கணக்கில் ஆஸி.யிடம் தொடரை இழந்தது. அதற்கு பழி தீர்க்கு ம் வகையில் தற்போது தொடரை வெ ன்று உள்ளது. 

இந்தப் போட்டியில் இந்திய அணி தரப் பில் துவக்க வீரர்களாக இறங்கிய முரளி விஜய் மற்றும் ஷிகார் தவான் இருவ ரும் சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். 

இதில் அறிமுக வீரராக  இறங்கிய தவான் மற்றும் தமிழக வீரர் விஜய் இரு வரும் அபாரமாக பேட்டிங் செய்தனர். இருவரும் இரட்டை சத வாய்ப்பை நழுவவிட்டனர். கோக்லி அரை சதம் அடித்தார். இதனால் இந்திய அணி 400 ரன்னைத் தாண்டி சவாலான  ஸ்கோ ரை எட்டியது. 

பெளலிங்கின் போது, சுழற் பந்து வீச் சாளர்களான ஜடேஜா, அஸ்வின் மற் றும் ஓஜா மூவரும் சிறப்பாக பந்து வீசி முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றினர். அவர்களுக்கு ஆதரவாக இஷாந்த் சர் மா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகி யோர் பந்து வீசினர். 

பார்டர் மற்றும் கவாஸ்கர் கோப்பைக் கான இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3 -வது டெஸ்ட் போட்டி மொகாலி நகரில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க அரங்கத்தி ல் கடந்த 14 -ம் தேதி முதல் 18 -ம் தேதி வரை நடந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன் னிங்சில் 408 ரன் எடுத்தது. ஸ்டார்க் 99 ரன்னும், டி.ஸ்மித் 92 ரன்னும், கோவ ன் 86 ரன்னும், வார்னர் 71 ரன்னும் ஹாடின் 21 ரன்னும் எடுத்தனர். 

பின்பு களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 499 ரன்னை எடுத் தது. ஷிகார் தவான் 187 ரன்னும், விஜய் 153 ரன்னும், கோக்லி 67 ரன்னும், டெ ண்டுல்கர் 37 ரன்னும், எடுத்தனர். 

அடுத்து 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 89 .2 ஓவரில அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்னை எடுத்தது. அந்த அணி தரப்பில், ஹியூக்ஸ் 69 ரன்னும், ஹாடின் 30 ரன்னு ம், ஸ்டார்க் 35 ரன்னும், கேப்டன் மைக் கேல் கிளார்க், லியான் மற்றும் டொகெர்டி ஆகியோர் தலா18 ரன்னும் எடுத் தனர். 

இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 31 ரன்னைக் கொடுத்து 3 விக்கெ ட் எடுத்தார். ஜடேஜா 35 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, அஸ்வின் மற்றும் ஓஜா ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். 

இந்திய அணி 2-வது இன்னிங்சில் 133 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை ஆஸி. அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 33.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்த 3-வது போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொட ரை 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 

இந்திய அணி தரப்பில், முரளி விஜய் 26 ரன்னும், புஜாரா 28 ரன்னும், கோக்லி 34 ரன்னும், டெண்டுல்கர் 21 ரன்னும், எடுத்தனர். இறுதியில் தோனி 18 ரன்னு டனும், ஜடேஜா 8 ரன்னுடனும் களத்தி ல் இருந்தனர். 

ஆஸி. அணி சார்பில், சிட்லே 34 ரன் னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். தவிர, லியான் மற்றும் டொகெர்டி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ஷிகார் தவான் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்