முக்கிய செய்திகள்

கடினமான ஆண்டை கடந்து வந்திருக்கும் இந்தியா - ஜனாதிபதி பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      இந்தியா
pratibha-patil 0

 

புது டெல்லி,பிப்.22 - நாட்டின் சில பகுதிகளில் வன்முறை மற்றம் பணவீக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு ஒரு கடினமான ஆண்டை கடந்து வந்திருக்கிறது என்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பெருமிதத்துடன் தெரிவித்தார். 

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை தனது உரையின் மூலம் துவக்கி வைத்த அவர், இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் மேலும் பேசியதாவது, 

ஒரு கடினமான ஆண்டை நாம் கடந்து வந்திருக்கிறோம். பெருமளவு வன்முறை சம்பவங்கள் போன்றவற்றால் நாட்டின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் சில பகுதிகள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டன. நாட்டின் வேறு பல பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் வன்முறை தொடர்ந்து தலைவிரித்தாடுகிறது. ஏழைகளுக்கான வறுமை ஒழிப்பு திட்டங்களின் பலன்கள் அவர்களை முழு அளவில் சென்றடையவில்லை. இந்த குறை பலரது மத்தியில் நிலவுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் ஏற்பட்ட பேய் மழைக்கு 200 பேர் பலியானார்கள். அவர்களது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடுமையான பேய் மழையால் வரலாறு காணாத உயிரிழப்பும், உடமைகளுக்கு இழப்பும் ஏற்பட்டது. அதை நினைத்து நமது நெஞ்சம் பதறுகிறது. 

கர்நாடக இசைக் கலைஞர் பண்டிட் பீம்சென் ஜோஷி மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்ரல் 21 ம் தேதி வரை நீடிக்கிறது. 2 கட்டமாக இந்த கூட்டத் தொடர் நடக்கிறது. முதல் கட்ட கூட்டத் தொடரின் போது 17 அமர்வுகளும், 2 வது கட்ட கூட்டத் தொடரின் போது 12 அமர்வுகளும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: