முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் தரவரிசை: முரளி விஜய் முன்னேற்றம்

புதன்கிழமை, 20 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

துபாய், மார்ச் -21  - ஐசிசியின் சர்வதேச டெஸ்ட் தரவரிசையில்  இந்திய தொடக்க ஆட்டக்காரர்  முரளி விஜய் 16 இடங்கள்  முன்னேறி தற்போது 43 - வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 மற்றும்  3​ -வது  டெஸ்ட் போட்டிகளில்  அடுத்தடுத்து  சதமடித்ததன்  மூலம் தனது  கிரிக்கெட்  வாழ்க்கையில்  அதிகபட்ச  தரவரிசையை  எட்டியுள்ளார்.  முரளி விஜய்.  அதே நேரத்தில்  தரவரிசையில்  10 ​- வது இடத்தில் இருந்த சேதேஷ்வர் புஜாரா, தற்போது  12​ -வது  இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அறிமுகப் போட்டியில் அபாரமாக  ஆடி 187 ரன்கள் குவித்த இந்தியாவின்  ஷிகர் தவன் 61 - வது இடத்தைப் பிடித்துள்ளார். டெஸ்ட் போட்டியில்  கோலிக்கு இது அதிகபட்ச தரவரிசையாகும். புஜாரா, கோலியைத் தவிர வேறு யாரும் முதல் இருபது  இடங்களுக்குள்  இல்லை.  சச்சின் இரு இடங்களை  இழந்து 21​ - வது  இடத்தைப் பிடித்துள்ளார்.  ஆஸ்திரேலிய  ஆஸ்திரேலிய  கேப்டன் மைக்கேல் இரு இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு  தற்போது 4​- வது இடத்தில் உள்ளார். 

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில்  தென் ஆப்பிரிக்காவின் ஹசிம்  ஆம்லா  தொடர்ந்து  முதலிடத்தில் உள்ளார்.  அந்த அணியின்  மற்றொரு வீரரான  ஏ.பி.டி வில்லியர்ஸ் 2 - வது இடத்திலும், மேற்கிந்தியத் தீவுகளின் சந்தர்பால்  3​​- வது இடத்திலும் உள்ளனர். பெளலர்கள் தரவரிசையில்  இந்தியாவின்  ரவீந்திர ஜடேஜா 6 இடங்கள்  முன்னேறி  35 ​- வது இடத்தைப் பிடித்துள்ளார்.  அஸ்வின்  8​- வது 

பிரக்யான்  ஓஜா 9​- வது  இடத்திலும்  ஜாகீர்கான் 16 இடத்திலும்  உள்ளனர்.  தென் ஆப்பிரிக்காவின்  டேல் ஸ்டெயின்  தொடர்ந்து  முதலிடத்திலும், அதே அணியின் வெர்னான் பிலாண்டர்  2​ ​- வது  இடத்திலும், பாகிஸ்தானின் சயீத் அஜ்மல்  3​ -வது இடத்திலும்  உள்ளனர்.  டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில்  தென் ஆப்பிரிக்காவின்  ஜாக்ஸ் காலிஸ்  முதலிடத்திலும், வங்கதேசத்தின்  ஷகிப் அல்ஹசன்  2​​​- வது இடத்திலும்  இந்தியாவின் அஸ்வின் 3​-வது  இடத்திலும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்