முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கப்பல் பாதுகாவலர் விவகாரம்: இத்தாலிக்கு இந்தியா உறுதி

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.22 - இத்தாலிய நாட்டு கப்பல் பாதுகாவலர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்படமாட்டாது என்று இத்தாலி நாட்டுக்கு இந்தியா உறுதி அளித்திருப்பதாக பாராளுமன்றத்தில் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். 

கேரள மீனவர்கள் 2 பேர் சுட்டுக்கொலை செய்த 2 பேர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இத்தாலி சம்மதித்துள்ளது. அவர்கள் இருவருக்கும் இந்திய கோர்ட்டு தூக்குத்தண்டனையை வழங்கக்கூடாது என்ற நிபந்தனையின்பேரில் அவர்களை இந்தியாவுக்கு அனுப்ப இத்தாலி சம்மதித்துள்ளது. அவர்கள் 2 பேரும் இந்தியாவில் விசாரணையை எதிர்நோக்குவார்கள் என்று இத்தாலி நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

இத்தாலி நாட்டு அரசு இதை அறிவித்த ஒரு சில மணி நேரத்தில் இதுகுறித்து பாராளுமன்ற லோக்சபையில் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். கப்பல் பாதுகாவலர்கள் 2 பேர்களையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இத்தாலி அரசு சம்மதித்துள்ளது. அவர்கள் இருவரும் தூக்குத்தண்டனையை எதிர்நோக்கமாட்டார்கள் என்று இந்திய அரசு உறுதி அளித்துள்ளது. சுப்ரீம்கோர்ட்டு விதித்துள்ள காலக்கெடுவுக்கு முன்பு அவர்கள் இருவரும் இந்தியாவுக்கு திரும்பிவிட்டால் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்படமாட்டார்கள் என்றும் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். அந்த 2 பேருக்கும் இந்திய கோர்ட்டு தூக்குத்தண்டனை விதித்து விடுமோ என்று இத்தாலி நாட்டு அரசு கவலைப்படுகிறது. இதுகுறித்து அந்தநாட்டு அரசுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பாதுகாவலர்கள் 2 பேரும் தூக்குத்தண்டனையை எதிர்நோக்கமாட்டார்கள் என்று இந்தியா உறுதி அளித்துள்ளது என்று பாராளுமன்ற இருசபைகளிலும் சுயவிளக்க அறிக்கை மூலம் சல்மான் தெரிவித்தார். இந்த பிரச்சினை சுமூகமாக முடிந்ததற்கு குர்ஷித் திருப்தியும் மகிழ்ச்சியும் தெரிவித்தார். இது வழக்கு விசாரணை சுப்ரீம்கோர்ட்டு வழிகாட்டுதலின்படி நடைபெறும் என்றும் தெரிவித்தார். 2 பாதுகாவலர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப விரும்புகிறது என்று தூதரகம் அணுகுமுறை மூலமாக இந்தியா அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் தூக்குத்தண்டனை வழங்குவது தொடர்பான விபரம் மற்றும் கப்பல் பாதுகாவல்ர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு விபரம் குறித்து இந்திய அரசிடம் இத்தாலி நாட்டு அரசு விளக்கம் கேட்ட பின்பே அவர்கள் இருவரையும் இந்தியாவுக்கு அனுப்ப இத்தாலி சம்மதித்தது. எது எப்படி இருந்தாலும் சுப்ரீம்கோர்ட்டு விதித்த கெடுவுக்குள் அவர்கள் இருவரையும் இந்தியாவுக்கு இத்தாலி அனுப்பி விசாரணையை எதிர்நோக்க செய்தால் அவர்கள் மீண்டும் கைது செய்யப்படமாட்டார்கள் என்றும் இந்தியா சார்பாக தெரிவிக்கப்பட்டது என்றும் சல்மான் இருசபைகளிலும் தெரிவித்தார். 

கேரள மீனவர்கள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இத்தாலி நாட்டு கப்பல் பாதுகாவலர்கள் 2 பேரும் இத்தாலியில் நடந்த பொதுத்தேர்தலில் ஓட்டளிப்பதற்காக சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்பேரில் அவர்கள் சென்றிருந்தனர். அவர்கள் இந்தியா திரும்ப விதித்திருந்த 4 வார கெடு நேற்றுடன் முடிவடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்