முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது டெஸ்ட்: இந்திய பவுலர்கள் மீண்டும் அசத்தல்

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.23 - ஆஸ்திரேலிய அணி கடந்த ஒருமாத காலமாக இந்தியா வில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டி கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே 3 போட்டி களை வென்று தொடரை கைப்பற்றியது.

4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு துவங்கியது.

மொகாலி டெஸ்டில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியிலிருந்து 5 மாற்றங் கள் செய்யப்பட்டது. கேப்டன் கிளார்க் காயம் காரணமாக விளையாட வில்லை இவருக்கு பதிலாக வாட்சன் கேப்டன் பொறு ப்பை ஏற்று கொண்டார். இதே போல பேட்டின்சன், ஜான்சன், மேத்யூ வாடே மேக்ஸ்வேல் ஆகியோர் இடம் பெற்றனர்.

இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. மொகாலி டெஸ்டில் அசத்தியதவானுக்கு காயம் காரணமாக இவருக்கு பதிலாக ரகானே இடம் பெற்றார். 

ஆஸ்திரேலிய கேப்டன் வாட்சன் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். எட்கோவனும், வார்னரும் தொடக்க வீரர்களாக களம் இறங் கினர். ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 4 ரன்னாக இருந்த போது வார்னர் இசாந்த் சர்மாவின் பந்துவிச்சில்  கோலியிடம் கேட்ச் கொடுத்து ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் எட் கோவனுடன் ஹியூக்ஸ்ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடி கொண்டிருந்த ஹியூக்ஸ் 45 ரன் எடுத்த போது இசாந்த் சர்மாவின்பந்தில் போல் டானார். பின்னர் ஆஸ்தி ரேலியாவின் புதிதாக கேப்டன் பொறுப்பை ஏற்ற வாட்சன் களமிறங்கினார். 

இவர் ரவீந்திர ஜடேஜா வின் பந்துவீச்சில் 17 ரன் எடுத்த நிலையில் தோனி யின் அற்புதமான ஸ்டம் பிங்கிற்கு அவுட்டானார். இதன் பிறகு வந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக நடையை கட்ட ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 136 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து. பின்னர் ஸ்டீபன் ஸ்மித்தும், சிடிலும் ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை ஓரளவுக்கு உயர்ந்தது. மொகாலி டெஸ்டை போல சிறப்பாக விளையாடிய ஸ்மித் அஸ் வினின் சுழலில் சிக்கினார். அப்போது ஆஸ்திரேலியா வின் ஸ்கோர் 189 ரன் எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்தது. ஆஸ்திரேலியா வின் டெயிலண்டர்களான சிடிலும்  பேட்டின்சனும் ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை 200ரன் எடுக்க உதவினர். 

டில்லி டெஸ்ட் முதல் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 231 ரன் எடுத்து 8 விக்கெட்டு களை இழந்தது. அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், இசாந்த் சர்மா 2 விக்கெ ட்டுகளையும், ஜடேஜா 2விக்கெட்டுகளையும் எடுத்தனர். இன்று இந்திய அணி ஆஸ்திரேலியாவின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் கடந்த 3 டெஸ்ட் போட்டிகளை போல இந்த டெஸ்டிலும் ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சிவைத்தியம் அளிக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்