முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி மீது விசாரணை கம்யூ. வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஏப்.- 25 - குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.  2002 ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் அதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தின் பின்னணியில் முதல்வர் நரேந்திர மோடி செயல்பட்டதாக மாநில உயர் போலீஸ் அதிகாரி குற்றம் சாட்டியிருந்தார். காவல் துறை உயரதிகாரி சஞ்சீவ் பட் தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத்தில் இந்த குற்றச்சாட்டை அவர் கூறியிருந்தார். கலவரத்தில் முஸ்லீம்களை காக்கும் பணியில் ஈடுபட வேண்டாம் என்று உயர் காவல் துறை அதிகாரிகளுக்கு மோடி உத்தரவிட்டதாக கூறியுள்ளார்.
இதில் இருந்தே வன்முறை சம்பவத்தில் நரேந்திர மோடிக்கு உள்ள பங்கு தெளிவாக தெரிகிறது. எனவே இது தொடர்பான விசாரணையை மேலும் தாமதப்படுத்த தேவையில்லை. இது குறித்து விசாரணை நடத்தி அவர் மீது சட்டப்படி வழக்கு தொடர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் சஞ்சீவ் பட் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை நடைபெற்ற போது அதை தடுக்க முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்